உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. செவ்வேள் பாடல்களில் குன்றமும்

கூடலும்

செவ்வேளைப் பற்றிய எட்டுப் பரிபாடல்களிலும் குன்றம் பற்றியும் கூடல் பற்றியும் பல செய்திகள் வந்துள. குன்றம் என்பது பரங்குன்றம்: திருப்பரங்குன்றம். கூடல் நான்மாடக் கூடல்:

மதுரை.

குன்றப் பெருமை :

பரங்குன்றத்தை

இமயக்குன்றத்திற்கு

ணையாகச் சொல்கிறது பரிபாட்டு: "பரங்குன்றிமயக் குன்றம் நிகர்க்கும் (8:- ii) என்றும், நின் சீர்நிரந் தேந்திய குன்றொடு நேர் நிரந் தேறுமா றேற்றமிக்குன்று (18:4-6) என்றும் வருகின்றன. இவ்வொப்புமை எதனால் ஏற்பட்டது என்பதை விளக்கியும் காட்டுகின்றன அப்பாடல்கள். முன்னையது பெருக்கம்: பின்னையது சுருக்கம்.

முன்னைப் பெருக்கம்:"திருமாலும் சிவனும் நான்முகனும் கதிரவர் பன்னிருவரும் மருத்துவர் இருவரும் வசுக்கள் எண்மரும் உருத்திரர் பதினொருவரும் திக்குக்காவலர் எண்மரும் பிறபிற தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் முருகனைக் காண்டற்காக மண்ணகம் வந்து உறைவதற்கு இடமாகக் குன்றம் இருத்தலால் இமயக்குன்றம் ஒக்கும்" என்கிறது (8:1-11)

பின்னைச்சுருக்கம் :

"முருகனைப் பெற்றதனால் உண்டாகிய புகழைப் பெருகக் காண்டது இமயம். அவன் வீற்றிருத்தலால் அதனொடு நேருக்கு நேர் நின்று சிறக்கும் சீர்மையது பரங்குன்றம்" என்கிறது

(18:4-6).

சுனைப் பெருமை:

இனிக் குன்றின் சுனையைத் திருமுருகன் பிறந்த இமயப் பொய்கைக்கு (சரவணத்திற்கு) ஒப்பிடுகிறது மேற்சுட்டிய எட்டாம்பாட்டு.