உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

66

“நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை

மின்னீன்ற விளங்கிணர் ஊழா

ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் அருவிதாழ் மாலைச் சுனை" என்பது அது (13-16)

"செவ்வேளே! நின்னைப் பெற்ற செறிந்த ஒளிமிக்க தாமரை விளங்கும் ஒப்பற்ற (சரவணப்) பொய்கையொடு ஒப்பாகும், நின் பரங்குன்றின் அருவி ஒழுக்கு நீங்காதசுனை" என்பது இதன் பொருள்.

ஒலிவளம்:

செவ்வேள் ஊர்தியாகிய யானையின் முழக்கம், இடிக்குரல் ஒக்கும். அவ்வியானையின் முழக்கம் கேட்ட சேவற் கோழி அஞ்சிக் குன்றம் அதிருமாறு ஒலிக்கும். அச்சேவற் கோழியின் அதிர்குரல் கேட்டு யானை முழங்கவும், யானை முழக்கம் கேட்டுச் சேவற்கோழி அதிரவும், பரங்குன்றக் குகையில் எழுகின்ற எதிரொலி அவற்றுக்கு மறுதலையாக அமைந்தது. பரங்குன்ற ஒலிவளம்.இவை.

முதல்வநின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல்,

குரல்கேட்ட கோழி குன்றதிரக்கூவ

மதநனி வாரணம் மாறுமா றதர்ப்ப

எதிர்குதிர் ஆகின் றதர்ப்பு மலைமுழை' (8.17-21) கொடிகள்:

பரங்குன்றச் சுனையின் பக்கம் வெற்றிக் கொடிகள் பல நிற்றலைக் குறிக்கிறது ஒரு பரிபாடல் (9)

ஆடலில் வல்லோர், ஆடலில் வல்லோரை வென்றனர் பாடலில் வல்லோர், பாடலில்வல்லோரை வென்றனர் சூதில் வல்லோர், சூதில் வல்லோரை வென்றனர்:

பிறபிற கலைகளில் வல்லோர், அவ்வக் கலைவல்லோரை வென்றனர்: அவ்வெற்றிக்கு அறிகுறியாகச்சுனையின்பக்கத்தே கொடி நாட்டினர்:

66

'ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும், பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,