உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

வல்லாரை வல்லார் செறுப்பவும்,

அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனல்

தடாகம் ஏற்ற தண்சுவைப்பாங்கர்ப்,

படாகை நின்றன்று

மேஎ வெஃகினவை

வென்றுயர்த்த கொடி விறல்சான்றவை" (9;7-80)

கூடலும் குன்றும் :

43

குன்றத்தில் இருந்து கூடலுக்குச் செல்லும் வழியையும் கூடல் முரசு முழக்கையும் நயம் பெறக் கூறுகிறது பரிபாடல் :

திருப்பரங்குன்றத்தில் இருந்து கூடலுக்குச் செல்லும் வழியில் ஏழ்துளைக் குழல் ஒலிப்பது போல் தும்பியும், ஐந்து துளைக் குழல் ஒலிப்பது போல் வண்டும், யாழ் இசைப்பது போல் ஞிமிறும் பாடுகின்றன. சுனைகள் பூத்து விளங்குகின்றன. கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை முதலிய கொடிகள் மலர்ந்து நறுமணம் பரப்புகின்றன. காந்தட் பூக்கள் இடமெல்லாம் மணம் விரிக்கின்றன. பிறபிற மலர்களும் மலர்ந்து தேன் துளிக்கின்றன; தென்றற் காற்று அவ்வழியில் அசை நடையிட்டு வருகின்றது.

கூடலில் அழகிய மங்கல முரசும் முழங்கியது. அம் முரசொலி காற்றால் மோதுண்ட கடல் போலவும், கடல் நீரைப் பருகும் முகில் போலவும், வானம் இடிக்கும் இடி போலவும் முழங்கும் பொழுதுகளிலெல்லாம் பரங்குன்றின் முழக்கம் மாறுமாறாக எதிரொலிக்கும் (8:22-35)

'பழம் புலவர்களால் பாடு புகழ் பெற்றவை கூடலும் குன்றமும். இக் கூடற்கும் குன்றத்திற்கும் இடையே அமைந்த தொலைவு மிகமிகச் சிறிதே. என்றாலும் ஆடவரும் மகளிரும் நெருங்கி விளையாடுதலால், வழி மிகத் தொலைவு உடைய தாயிற்று. மகளிர் பந்தலில் இருந்தும் மைந்தர் குடுமியில் இருந்தும் வீழ்ந்த மலர் மாலைகளால் தடுக்கப்பட்டு அவ்விடத்தே செல்லுதற்குரிய வழி இல்லாததாயிற்று.

"புகழ் வாய்ந்த பரங்குன்றில் பலவிடங்களிலும் செய்கின்ற பூசையினால் எழுந்த நறுமணப் புகை, அவ்விடங்களிலிருந்து மேலே மேலே போய் இமையாக் கண்ணராம் இமையோரும் இமைத்து அகலுமாறாகின்றது. கதிரோனைக் காணுதற்குக்