உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பரிபாடலில் திருமுருகன்

55

"அச்சமுண்டாம் வகையில் காடு செறிந்துள்ளது. மழை வளமாகப் பொழிவதால் சுனைகளில் நீர் ததும்பி வழிகின்றது. மலர்கள் பெருகிக் கிடத்தல் காமவேளின் மலர்க்கணைப் புட்டில் போன்றது. கார் காலத்தில் மலரும் காந்தள் பூக்கள், போரில் தோற்றவர்களின் கட்டப்பட்ட கைகள் போன்றன. வண்டுகளால் திறக்கப்பட்ட அழகிய காந்தள் அரும்புகள், யாழின் நரம்பினை அவிழ்ப்பவர் கைகளைப் போன்றன.'

"முன்பனிக் காலத்தில் முகில் முழங்கி இந்திரவில்லை உண்டாக்கியது. மலை மேலுள்ள மரங்கள், அவ்விந்திர வில்லுக்கு அம்பு உண்டானால் சொரிவது போல் மலர்களைச் சொரிந்தன; போர் முழக்கம் போல் கோயிலில் இசைக் கருவிகள் முழங்கின: அம்முழக்கத்தொடு முகில் முழக்கமும் கூடி முழங்கியது.

"மலையில் இருந்து ஒழுகும் அருவி, அம்மலை முத்து மாலை அணிந்ததென விளங்கியது. தினைப் பயிர்கள் குருவிகள் வந்து கொள்ளையிடுமாறு விளைந்து நின்றன. சுனையின் கரையில் நின்று நீரில் சாய்ந்த கொறுக்காந் தட்டையில், சுனையில் மலர்ந்த பல வண்ணப் பூக்கள் முட்டிக் கொண்டு நிற்றல் வளைந்த வானவில்லை ஒப்பக் காட்டின" (18;20-50)

இவ்வியற்கை வளத்தின் இறுதிப்பகுதி ஒவ்வோர் அடியால் அழகுறப் புனையப்பட்டுள்ள அருமை, சுவை மிக்கதாம்.

கருவியார்ப்பக் கருவிநின்றன குன்றம்: அருவியார்ப்பமுத் தணிந்தன வரை: குருவியார்ப்பக் குரல் குவிந்தன தினை,

எருவை கோப்ப எழிலணி திருவில்: வானில் அணித்த வரியூதும் பன்மலரால் கூனி வளைத்த சுனை,

என்பது அது (18:45-50)

காற்றுவகை :

அருவி ஒழுகும் பரங்குன்றத்தில் ஆடவர் தம் அகன்ற மார்பில் பூசிய சந்தனத்தின் நறுமணத்தை ஏற்றுவரும் காற்றும், கயலை ஒத்த கண்களையுடைய மகளிர்தம் நறிய கூந்தலில் புகுந்து வெளிப்பட்ட காற்றும், செவ்வேளுக்கு எடுத்த பூசையில் எடுக்கப்பட்ட நறுமணப் புகையொடு கலந்து வந்த காற்றும், பக்கமெல்லாம் பரவுதலை விளக்குகிறது ஒரு பரிபாடல் (21:43-