உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

53), இவற்றையன்றிக் கலைவளம் என்னும் பகுதியிலும் இயற்கை

வளம் காட்டப்பட்டமை காண்க.

வான் சிறப்பு :

இறைவனைப் பாடும் பாடலில் இவ்வியற்கை வளங்களை இசைப்பதும், வழி பாட்டாளர் வாழ்வியல் வளங்களை விரிப்பதும் என்ன பயன் கருதியதெனில், 'சுவையூட்டல்' என்னும் அளவில் நிற்பன அல்லவாம்.

இறை வாழ்த்தை அடுத்து 'வான் சிறப்பை' வள்ளுவர் வைத்த வரன்முறையைக் காண்பார் இதன் பொருளை எளிதில் அறிவர். அவ்வான் சிறப்பில் 'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு" என்று கூறிய று அருமை எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

வானம் பொய்த்தால் முதற்கண் 'சிறப்பு' எனப்படும் திருவிழாக்கள் நிகழா; அவ்வானம் மேலும் பொய்த்தால் வழக்கமாக நாள் தோறும் நிகழ்த்தப்பெறும் பூசையும் நிகழா. ஆகலின் ஊரும் நகரும் கூடி விழாக்கோலம் கொண்டமை இயற்கை வளத்தின் வழிவந்ததேயாம். அஃதிலாக்கால் அச் சிறப்புகள் இல்லை என்பதாம்.

வயிற்றுப் போராட்டம் மிக்க வாழ்வில் கலைவளம் சிறப்பது இல்லை. வளமைப் பெருக்கு அல்லது செல்வக் கொழிப்பு விளங்கும் இடத்தேதான் கலைப் பெருக்கும் உண்டாகும். இஃது உலகியல் தழுவிய உண்மை. ஆதலால் றை நலம் கமழும் பாடல்களில் இயற்கை வளமும் கலை வளமும் செறிந்தமை கின்றன என்க.