உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. செவ்வேள் பாடல்களில் இறைமை

இருவகைப் பாடல்கள் :

மாட்சி

இறைவனைப் புகழ்ந்து பாடுதல் வழிபாட்டுப் பாடல்களாம். பெருந்தேவபாணி, தேவபாணி, தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா,நாலாயிரப்பிரபந்தம் இன்னவை போல்வன வெல்லாம் வழிபாட்டுப் பாடல்கள் அல்லது புகழ்ப் பாடல்கள். இவற்றைத் தோத்திரப் பாக்கள் என்பர் வட மொழியாளர். இவற்றுள் ஆங்காங்கு இறைமைக் கோட்பாடுகளும் இடம் பெற்றிருத்தல் உண்மை எனினும், மிகுதி பற்றி வழிபாட்டுப் பாடல்கள் என்ற பகுப்பிலேயே அடங்குவன.

இன்னொரு வகைப் பாடல்கள் உள. அவை இறைமைத் தன்மையை மட்டுமே விளக்குவன. சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், திருமந்திரம் இன்னவை போல்வன. இவை மெய்ப் பொருட்பாடல்கள் அல்லது பொருட் பாடல்கள். இவற்றைச் சாத்திரப்பாக்கள் என்பர் வடமொழியாளர்.

பரிபாடலில் வரும் செவ்வேளைப் பற்றிய பாடல்கள் கடவுள் வாழ்த்து என்னும் பகுப்பில் வருதலின் புகழ்ப் பாடல்களே. இருப்பினும் பொருட்கருத்துகள் ஆங்காங்குப் பொதுளியுள்ளன. இவ்வெட்டுப் பரிபாடல்களிலும் ஐந்தாம் பாடல் ஒன்றில் சீரிய இறைமைக் கருத்துக்கள் உள.

இறைவன் :

வெறியாடும் வேலன், அவ்வாடற் களத்தில் இறைவனாம் வேலன் உறைவதாகக் கருதி வாழ்த்துகின்றான். அவ்வாழ்த்து வாய்மையோ பொய்மையோ எனின், வாய்மையும் அன்று; பொய்மையும் அன்று என்கிறார் புலவர்.

முழுதுறு உலகும் உறைபவன் இறைவன்; அவன் அவ்வெறிக் களத்திலே உறைவதாகக் கூறினால், அவ்விறைவன் பெருநிலைக்குப் பொருந்துவதன்றாம், ஆகலின், அதனை வாய்மை எனல்