உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 35ஓ

அமையாது. இனி, அவ்வெறிக் களத்திலே உறைவதாக வெறியாடுவோன் கருதுவான் எனின், அதுவும் தக்கதே, என்னெனின் எங்கும் உறையும் இறைவன் அங்கில்லை எனல் ஆகாதே! ஆகலின் பொய்மை எனலும் பொருந்தாது என்கிறார். சிறப்பு :

இனி இறைவன் உருவும் பிறப்பும் நிறமும் குணமும் ஆகிய பாடு பொருள்களில் ஒன்றுடையன் அல்லன். அவ்வாறு உடையன் எனின், அவன் முழுமுதல் சிறப்புக்குச் சிறப்பிலதாய் முடியும். பிறர்பிறர் பெருநிலை அடைதலுக்கும் தாழ்தலுக்கும் ஆணையாக விளங்கும் இறைமை, அத்தன்மைகளுக்கு உட்பட்டது எனின் பொருந்துவது இல்லை! அவ்விறைமை தனக்கொரு முதலும் ஆை ணையும் இல்லது எனப் பொருளியல்களைக் கூறுகின்றது அப்பாடலின் ஒரு பகுதி (5:16-21).

"சால்வ தலைவஎனப் பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே அவை, வாயும் அல்ல; பொய்யும் அல்ல; நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற்

சிறப்போய்; சிறப்பின்றிப் பெயர்குவை;

சிறப்பினுள் உயர்பாகலும்

பிறப்பினுள் இழிபாகலும்

ஏனோர்நின் வலத்தினதே”

என்பது அது. அப்பாடலின் முடிநிலையை அடுத்தும் பொருளியல் புகல்கின்றார் ஆசிரியர்.

சேர்வார் சேரார் :

திருவருளை விரும்பி ஏற்பவரும் அறநெறி நிற்பவரும் சிறந்த சால்புடையரும் பெருந்தவத்தரும் வணங்கத்தக்க மேலவரும் றைவன் திருவடி அடைவர்; கொல்லும் குணத்தொடு கொடுஞ்சினம் உடையவரும், அறநெறியில் செல்லாத இழிஞரும், அழிதவ வழிக்கு ஆட்பட்டவரும். மறுபிறப்பு இல்லை என்று கூறும் மடவரும் இறைவன் திருவடியை அடையார் என்கிறார்:

"நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை, மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும்

சேரா அறத்துச் சீரி லோரும்