உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

அழிதவப் படிவத் தயரியோரும்

மறுபிறப் பில்லெனும் மடவோரும் சேரார்;

நின்னிழல் அன்னோர் அல்லது, இன்னோர்

அறப்பயன் :

சேர்வர் (5:71-78)

59

'அறம்' என்பதைத் தனக்குரிய பெயர்களுள் ஒன்றாகக் கொண்ட திருக்குறளில் அறன் வலியுறுத்தல் என்பதோர் அதிகாரம். அதில் அறத்தான் வருவதே இன்பம் செயற்பால் தோரும் அறனே அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை, என்றெல்லாம் அறத்தின் நலப்பாட்டை வலியுறுத்துவார் வள்ளுவர்.

'அறம் செய்வார் வீடு பேறடைவர்' என்பதொரு கருத்தும் பழமைதொட்டு அமைந்ததே, அக்கருத்து பத்தொன்பதாம் பரிபாடலில் உவமைவகையால் சுட்டப்பட்டுள்ளது.

கூடலில் இருந்து குன்றத்திற்குப் போகின்றோர் செலவினைக் கூறவரும் ஆசிரியர் "அறத்தை மிகுதியாகச் செய்து அதன் பயனாம் இன்பத்தைக் கொள்வதற்கு விண்ணவர் உலகத் திற்குப் போகின்றவர் போலக் கூடலில் இருந்து குன்றத்திற்குச் செல்கின்றனர் என்கிறார்.

“அறம் பெரிதாற்றி அதன்பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல"

என்பது அது (19:10-11)

வ்வாறு மெய்ப்பொருட் செய்திகள் சிலவற்றைச் செவ்வேள் பற்றிய பரிபாடல்களின் வழியே அறிந்து கொள்ள வாய்க்கின்றது.