உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்றம் :

பரிபாடலில் திருமுருகன்

61

கூட்டுவழிபாடு என்பது புதுவழக்கன்று; பழமையானது என்பது பரிபாடலால் விளங்கும்.

“உடங்கமர் ஆயமோ டேத்தினம் தொழுதே” (19:105)

"யாமும் எம் சுற்றமும் பரவுதும்" (17:52}

“நன்றமர் ஆயமோ டொருங்குநின் அடியுறை இன்று போல் இயைகெனப் பரவுதும்" (21:68-9) என வருவனவற்றால் இதனை அறியலாம். நேர்தல் :

கோயிலுக்கு நேர்த்திக்கடன் இடுதல் பழவழக்காகும் இதனை, மணியும் கயிறும் மயிலும் குடாரியும் பிணிமுக முளப்படப் பிறவும் ஏந்திச் சென்ற மாந்தர் காட்சியால் (8:700-1) அறியலாம்.

சூள் :

உண்மை சொல்லல் (சத்தியம் செய்தல்) என்பது பண்டு சூள் எனப்பட்டது, தாம் உண்மை சொல்வதை வாயால் சொல்லும் சொல்லளவில் நில்லாமல், தாம் மதிக்கும் பொருளைத் தொட்டுக் கூறுதல் வழக்கு. இன்றும், ஆணையிட்டுக் கூறுவார் பிள்ளையைத் தாண்டுதல், துணியைத் தாண்டுதல், தலையில் தொடுதல், நூல்களைத் தொடுதல், தெய்வப் பெயர் கூறுதல் எனப் பல வகையாக இடந்தொறும் வழங்குதல் கண்கூடு,

வையை மணல் தொட்டுச் சூள்கூறல், குன்றத்து அடி தொட்டுச் சூள்கூறல் என்பனவும், செவ்வேள், மயில், வேல் வள்ளி, அறவோர் ஆகியோரைச் சூளிட்டுக் கூறல் என்பனவும் எட்டாம் பரிபாடலில் இடம் பெற்றுள. பொய்ச் சூள் வேலன் மேல் கூறினால் அவ்வேலன் பொறுத்துக் கொண்டாலும், வேல் பொறுக்காமல் அழிக்கும் என்பதை,

"முருகுசூள் சூளின், நின்னை அருளி அணங்கான்மெய் வேல் தின்னும்"

என்கிறது (8.65-66) பரிபாடல்.