உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஞமன் : (எமன்)

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

கூற்றுவன் தன் செங்கோன்மையில் தவறாதவன் என்னும் கருத்தால் 'திருந்து கோல் ஞமன்' எனப்பட்டமை அறிய வருகின்றது (5:61) ஞமன்கோல் என்பதும் சமன் கோல் என்பதும் நடுவுநிலைக்குச் சான்றாக விளங்கும் தராசுக், கோல் என்க. முன்பு துலாக்கோல் எனவும் வழங்கப்பட்டது. இஞ்ஞமன், எருமையை ஊர்தியாக உடையவன் என்னும் குறிப்புப் பரிபாடலார் நாளிலேயே எழுந்துள்ளது. எருமை இருந்தோட்டி எனக் கூற்றுவன் ஆணையைக் குறிப்பிடுகிறார் அவர் (886)

திருவில் :

வானவில்லைத் திருவில் என்று கூறுதல் பழ வழக்கு அவ்வழக்கினைச் சுட்டும் பரிபாடல் (18.48) "வச்சிரத்தான் வானவில்லு" என்றும் கூறுகிறது. (18.39) இந்நாளில் இந்திரவில் என்னும் வழக்குக்கு, மூலச் செய்தி ஈதாகலாம்.

வல்லும் வட்டும் :

முருகன் வல்லுப்போர் வல்லாய் என்றும் வட்டுருட்டு வல்லாய் என்றும் விளிக்கப் பெறுகிறான். இதனால் அக்காலத்தில் இத்திறம் பெரிதும் போற்றப்பட்டது என்பது வெளிப்படுகின்றது. (18:41-2). மன்னர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்பது வெளிப்படுகின்றது (18:41-2). மன்னர்களால் பெரிதும் விரும்பப் பட்ட இச் சூதுவகைகளில் செவ்வேளையும் வல்லாளனாகக் கூறுதல் வியப்பான செய்தியே.

கவழ மிச்சில்:

செவ்வேள் திருக்கோயிலை வலம் வந்து, கோயில் யானை உண்டு எஞ்சிய கவழத்தை உண்ட மகளிர், தம்மை மணந்து கொண்ட காதலரின் பேரன்பைப் பெறுவர் என்றும், மணமாகாத மகளிர் குற்றமற்ற நன்மணவாளனைப் பெறுவர் என்றும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தமை ஒரு பாடலால் விளங்குகின்றது. இது வியப்பானதொரு நம்பிக்கையாம்.

“பன்மண மன்னும் பின்னிருங் கூந்தலர் கன்னிமை கணிந்த காலத்தார்நின்

கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில்

மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார்