உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

முறுவற் றலையளி எய்தார்நின் குன்றம் குறுகிச் சிறப்புணாக் கால்" (19:89-94)

63

என்பது அது. யானையுண்டு எஞ்சிய உணவைத் தெய்வத் தன்மையுடையதாகக் கருதியமையால் 'சிறப்புணா' என்றார் என்பது அறியத் தக்கது.

பண்ணியம் :

கோயிலுக்குச் செல்வார் பல வகைப் பண்டங்களைக் கொண்டு செல்லலும், ஆங்கும் பலவகைப் பண்டக் கடைகள் இருத்தலும் இன்றும் நடைமுறை. குரங்குகள் தின்னுமாறு பண்டங்கள் வழங்குவதையும், கருமுகமந்தி தின்னுமாறு கரும்பு கொடுப்பதையும் பரிபாடல் குறிக்கின்றது (19:38-9).

எதிரொலி :

பெருந்திரளான திருவிழாக் கூட்டத்தில் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிந்து போதலும், அவை அழுது அரற்றலும், பெற்றோர்கள் அவலித்தலும் இக்காலக்காட்சி. முன்னும் அந்நிலை இருந்ததைப் பரிபாடலால் அறிகிறோம். பெற்றோரைப் பிரிந்த ஒரு குழந்தை குன்றத்தில் அங்கும் இங்கும் ஓடி ஓடி 'அம்மா' 'அம்மா' என்று ஒலிக்க, மலை அவ்வொலியை எதிரொலிக்கப்,பெற்றோர் ஒலியென எண்ணிய குழந்தை மேலும் மேலும் ஒலிக்க நிகழும் காட்சியை விரிக்கிறது பரிபாடல்

(19:58-66).

புலிபுலி :

குழந்தைகளின் அழுகையை நிறுத்த அச்சங்காட்டுதல் இன்றும் வழக்காக உள்ளது. பரங்குன்றத்தில் உள்ள வேங்கை மரங்கள் பூத்துப் பாறைமேல் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. வரிவரியாகக் கிடக்கும் அப்பூக்கள், புலியெனத் தோன்று கின்றன. அதனைக் காட்டிப் 'புலிப்புலி' என்று அச்சுறுத்திக் குழந்தையின் அழுகையை நிறுத்துகின்றனர். இதனை,

“அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப”

என்பது பரிபாடல் (14:12)

ஆடல்கள் :

மரங்களை அசைத்துப் பூவுதிர்த்தல், அழகழகான வண்ணங்களில் பந்து செய்து விளையாடல், பூநீர் பெய்த வட்டுக்கொண்டு எறிந்து விளையாடல், மலையை நோக்கி