உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

-

இளங்குமரனார் தமிழ்வளம் 35ஓ

எதிரொலி உண்டாகக் கூவுதல் என்பன குழந்தைகளும் மகளிர் களும் விளையாடிய விளையாடல்களால் அறிய வருகின்றன. வளர்ந்த பெரியவர்களாகிய ஆடவர்கள் துடிகொட்டுதலும், அத்துடிக்கு ஏற்றவாறு விறலியர்கள் தோள்நோக்கம் ஆடுதலும் ஆகிய பிறபிற கலைவளச் செய்திகளும் முன்னரே கண்டவை.

பெண்மை:

பெண்ணுக்குப் பெருமை இருந்ததைப் பரிபாடல் குறிக் கின்றது. அதிலும் பெற்றவளுக்கு ஒரே பெண்ணாக இருந்தவள் பெற்றோரால் மிக மதித்துப் போற்றப் பட்டாள் என்றும், அவளை விரும்பி மணந்தோனும் அவ்வாறே மதித்துப் போற்றினான் என்றும் அறிய முடிகின்றது (8:58)

தந்தை :

'தந்தையர் ஒப்பர் மக்கள்' என்பதொரு பழமொழி சான்றோன் தந்த மைந்தன், சான்றோனாக விளங்குவதை விரும்பினான் என்றும், அந்நிலைக்கு மாறு சொல்ல நேருங்கால் அவனுக்குப் பெருநாணுதலுண்டாம் என்றும், பெற்றோரைச் சுட்டிக் குறை சொல்லுதற்கு மிக வருந்தினர் என்றும் பரிபாடலால் அறிய வாய்க்கின்றது. (8:57).

வாய்மை :

கொடுப்பதாகச் சொல்லிய ஒன்றை அஃது எத்தகைய அருமையுடையதாயினும், அதனை மாற்றிக் கூறுதல் பெருமை யன்று என்று எண்ணும் சான்றாண்மை போற்றப் பட்டதைத் தான் ஈத்தது அரிதென மாற்றான் வாய்மையன் ஆதலின், என்கிறது பரிபாடல் (5:32-33).

தோல்வி :

போரில் தோற்றுப் போனவர் கையைப் பின் கட்டாகக் கட்டுதல் வழக்குண்மையைப் பரிபாடல் காட்டுகிறது.

புகழ் :

"போர்தோற்றுக் கட்டுண்டார்கை" என்பது அது.(18:34).

புகழை அறிவெல்லையால் அறியப்படாத புகழ் என்கிறது ஒரு பரிபாடல் (19:2). புலவரை அறியாத புகழ் என்பதைப் புலவரை இறந்த புகழ் என்னும் புறநானூறு. புலவரை அறிவின் எல்லை. இதனை மண்டேய்த்த புகழ் என்னும் சிலம்பு. புகழ் பெருகப் புவி சிறுகுமாகலின் மண்டேய்த்த புகழ் எனப்பட்டது