உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில்

திருமுருகன்

65

என்பது உரை. 'நிலவரை நீள்புகழ்' ஞாலத்தின் மாணப் பெரிது என்பவை குறள் நடை. இவையெல்லாம் சங்ககால ஒத்தியல் பகர்வன; அதன் சார்புகாலச் சார்பு சாற்றுவன.

சிறப்புணா :

சான்றோர் உரைக்கும் உரை 'செவியுறை' எனவும் செவியறிவுறூஉ எனவும் படும், மெய்யான மருந்து போலும் நலம்செய்யும் வாழ்த்து வாயுறை வாழ்த்து எனப்படும். கேள்வியைச் செவிக்குணவு என்பது வள்ளுவம். பரிபாடலால் இவற்றை ஒப்பத் தழுவும் ஒரு நடை காட்டுகிறார். அது,

“வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி”

என்பது (19:95-6). "எம் வாழ்த்தினை நின் செவிக்குச் சிறப்பு உணாவாகக் கேட்டல் வேண்டும்" என்பது இதன் பொருள். அமைச்சர் :

அமைச்சரை அரசர் கண்ணெனல் பழமரபு. ஒற்றரும் நூலறிவு மிக்க அமைச்சரும் அரசர்தம் கண்ணெனக் கூறும் குறள் (587).பரிபாடல், அமைச்சரைக்

66

கடனறி காரியக் கண்ணவர்"

என்கிறது (19:22) அமைச்சர் இயலும் செயலும் விளக்க வல்ல தொடர் இஃதாதல் அறிக.

செண்ணிகை :

புனைவகைக் கோலச் சிறப்பும், புனைகலம் ஆக்கத் திறச் சிறப்பும் ஒருங்கு காட்ட வல்லதாய்ச் செண்ணிகை என்பதோர் தலையணி பரிபாடலில் சுட்டப்படுகின்றது.அது,

“கண்ணொளிர் திகழடர் இடுசுடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற யிடையிடை யிழைத்தியாத்த செண்ணிகைக் கோதை’

55

எனப்படுகின்றது (21:54-56).

படர்ந்த முகிலின் இடையே தோன்றி ஒளி செய்யும் மின்னல் போல், கண்கவரும் ஒளியுடையதாகச் செண்ணிகை விளங்குகின்றது. அது பொற்றகட்டால் இடைவெளிபடப் பட வரிகளாய் அமைந்து கூந்தலில் மாட்டப்படுவதாம் சிறப்பினது, கூந்தல் கருமுகிலென, செண்ணிகை மின்னென விளங்குதலை விளக்குகின்றது இத்தொடர்.