உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அடையல் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

அடையல் (செருப்பு) அழகும், அதன் செய் நேர்த்தியும், இந்நாளிலும் வியப்புறும் வண்ணம் அமைந்துள்ளது ஒரு

பரிபாடலில்:

“தைப்பமை சருமத்தில் தாளியை தாமரை

துப்பமை துவர்நீர்த் துறைமறை அழுத்திய

வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த வரிமலி அரவுரி வள்புகண் டன்ன புரிமென பீலிப் போழ்புனை அடையல்”

என்பது அது (21:3-7).

செவ்வேள் திருவடி செந்நிறத்தது. அதற்கேற்ற வண்ணம் பொருந்தி அமைய அடையல் வேண்டுமென அவாவுகின்றார் புலவர், அந்நாளில் அவர் கண்ட அடையல் தொழில் மாண்பை நாமறிந்து கொள்ள வண்ண ஓவியமாகத் தீட்டுகிறார், தாமரை இதழ் போலும் திருவடி நிறத்திற்கு ஏற்ற வகையில், பவளம் போலும் நிறமுடைய துவர் நீர்த் துறையில் முழுவதும் மறையு மாறு அழுத்திப் பதனிடப் பட்ட தோலால் செய்யப்பட்டது அடையல். அதன் முதுகாக அமைந்த மேல் வார் வரிகள் மலிந்த பாம்பின் தோலை ஒப்பதாகவும் மயிர் செறிந்ததாகவும் மயிற் பீலியின் பிளவுகளைக் கொண்டு செய்யப்பட்ட செய்ந் நேர்த்தி யுடையதாகவும் இருந்தது.

அடையல் செய்தல், பயன் கலை; அதன் செய்திறமோ கவின் கலை, கலையும் தொழிலும் கைகோத்துச் செல்லும் இந்நிலை எத்தகு நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைந் திருத்தல் பாராட்டுக்கும் பயன்படுத்துவதற்கும் உரியதாகும்.

மாலை :

அது.

மாலைவகைகளைக் குறிக்கிறது ஒரு பரிபாடல் தொடர் -

"நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை”

என்பது (19:80-1) இதனை விளக்கும் பழைய உரையாசிரியர்: தெற்றின மாலைகள் போல மலர் நிறைந்தும், கோத்த மாலைகள் போல நிறம் மாறுபட்டும், தொடுத்த மாலைகள் போல டையிட்டும், தூக்கிக் கட்டினமாலைகள் போல நெருங்கியும் என்கிறது. தெற்றுதல், கோத்தல், தொடுத்தல், தூக்கிக் கட்டுதல்