உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

67

என நால்வகையில் வேலைப் பாடுடையவை அம்மாலைகள் என்பதைப் பகுத்துக் காட்டுகிறது அப்பாட்டு.

தெற்றுதலாவது திண்டுபடச் செய்தது அல்லது திரட்டு மாலையாக அமைந்தது.

கோத்தலாவது ஊசிவைத்து ஒழுங்குறத் தைத்தது.

தொடுத்தலாவது

யைத்தது,

ணை

ணைக் கண்ணிகளாக

தூக்கிக் கட்டியது மேலும் கீழும் தொங்கல் அமைய வேலைத் திறம் சான்றது. இவ்வாறெல்லாம் மலர் மணத்தொடு கலை மணமும் இயைந்து இருந்தமை பரிபாடல் வழியே அறிய முடிகின்றது.