உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாக்கம் :

பரிபாடலில் திருமுருகன்

69

இனி அகலிகை, கவுதமன், இந்திரன், இரதி, வச்சிரம், தெய்வப் பிரமம், புரந்தரன் என்பவை பெயர்கள் ஆகலின் அவ்வாறே ஆட்சி செய்ததற்கு நேர்ந்தது. இனிக், கிரௌஞ்சம் என்னும் பெயருடைய மலையைக் குருகொடு பெயர் பெற்ற மால்வரை என்றும் (5:9). குருகு என்னும் (19:36) "புள்ளொடு பெரிய பொருப்பு" என்றும் (21:9) ஆட்சி செய்த சொல்லாக்க முயற்சியும் அந்நாளில் இருந்தமை அறியத் தக்கதே. இம்முயற்சி கலித்தொகைப் பாடல்களிலும் உண்டு. பின்னே கம்பர் பாடல்களில் இம்முறை பேராட்சி செய்ததை அறியலாம்.

சமாதி என்னும் வடசொல்லை 'நொசிப்பு என்கிறார் கடுவன் இளவெயினனார் (5:27). மணத்தினை ஒன்றாக்கி நுண்ணிதாகக் காண்டலாதலின் சமாதி நொசிப்பு எனப்பட்டது என்கிறார் பரிமேலழகர். இம்மொழியாக்க ஆட்சியை ஒரு நெறியாக முந்தையோர் கொண்டனர் என்பது நப்பண்ணனாரும் (19) நல்லச்சுதனாரும் (21) காட்டிய சொல்லாக்கங்களால் கண்டு கொள்ளலாம். 'அக்கினி' என்பதை அனலட் (5.9) என்பதும் இவ்வழிப்பட்டதே.

சில ஆட்சிகள் :

கோடரி என்பது 'குடாரி' என ஆளப்படுகிறது. (5:34; 66) இதே ஆட்சியைப் பிறரும் மேற்கொள்ளுதலால் (8:10) பரவிய வழக்காக இருந்திருத்தல் வேண்டும்.

ஒன்றனை அடுத்து நிற்பது அடை' எனப்படும். அடியைத் தொட்டு இருத்தலால் தொடுதோல் எனப்படும். செருப்பினைப் பரிபாடலார் 'அடையல்' என்பது பிறர் செய்யாத புத்தாட்சியாம்) (21:7).

-

'ஏலல்! என்பதை மாறு ஏற்றல் பொருளில் எதிரிடுதல் பொருளில் வழங்குவதும் (9:41) ஏறுமாறு, எதிர்குதிர் என முரண் இணை மொழியாட்சி கொள்வதும, 'பண்' என்பதைப் பண்ணை, எனத் தொகுதிப் பெயர் போல் ஆள்வதும், 'எல்லா’ 'எலாஅ' என விளிப் பொருளாட்சி செய்வதும், இதோ என்னும் பொருளில், ஈதா என வழக்கு மொழியில் கூறுவதும் பரிபாடல் சொல்லாட்சிகளில் சிலவகைகளாம்,

ஓவியத்தை 'ஓவம்' என்கிறார் (21:28). சிவிறி அல்லது விசிறியைச் சாந்தாற்றி என்கிறார் (21:30) நீர்பெய்து எறிந்து