உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

விளையாடும் தட்டினைப் பூநீர்பெய்வட்டம், என்றும் (21:42) தலைக்கோலத்தைச் 'சென்னிகை' என்றும் (21:56) நல்லச்சுதனார் வழங்குதல் அவர்தம் சொல்வளச் சீர்மையை விளக்கும். அடையல் என்று வழங்கியவரும் அவரே என்பதும் அறியத் தக்கது.

69

ஒப்பநாடி அத்தகவு ஒறுப்பவன் எனப்படும் கூற்றுவனை 'ஞமன்' எனல் 'ஞமன்கோல்' என்னும் பண்டை ஆட்சி பற்றி எழுந்ததாகலாம் (5:61) ஆனால் அலைதல் பொருளில் ஞமன் எனவருதல் (8:44) பரிபாடல் தரும் புதுச் சொல்லாகும். முருகனுக் குரிய அறுமுகன் என்னும் பெயருக்குரிய அறுமுக ஆட்சி (14:21) பரிபாடலிலே இடம் பெற்றுள்ளது. யாத்திரை அருச்சிப்போர் மார்க்கம் சருமம் சோபனம் முதலிய பிற சொல்லாட்சிகள் பரிபாடலில்தான் முதன் முதல் இடம் பெற்றுப் பின்னைப் பெருவழக்கில் ஊன்றியமை அறிய வாய்க்கின்றன.

எதுகை நயம் :

பதினெட்டாம் பாடல் ஒன்றில் மட்டும் போரெதிர்ந்து, காரெதிர்ந்து நீர்நிரந்து, சூர்நிரந்து, சீர்நிரந்து எனவும், ஐவளம், மைவளம், கைவளம், மொய்வளம், மெய்வளம், நைவளம் எனவும், ஆர்ததும்பு, சூர்ததும்பு, கார்ததும்பு, போர்ததும்பு, ஏர்ததும்பு எனவும், கருவி, அருவி, குருவி,எருவை எனவும் பிறபிற வாறும் எதுகைகள் அமைந்துள்ளமை பரிபாடல் சைவளத்திற்கு ஏற்ப இனிது இயலுமாற்றை விளக்குவதாய் அமைகின்றது.

நாடகவியல் :

66

சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன், ஈன்றாட்கு ஒரு பெண் இவள்"

"இருண்மையீர், உண்கண் இலங்கிழை ஈன்றாட்கு அரியளோ? ஆவ தறிந்திலேன்".

ஈதா, வருபுனல் வையை மணல்தொட்டேன் தரு மணவேள் தண்பரங் குன்றத் தடிதொட்டேன் என்பாய்

கேளிர் மணலின் கெழுவும் இதுவோ

ஏழுலகும் ஆளி திருவரைமேல் அன்பளிதோ?