உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

“என்னை அருளி அருண்முருகு சூள்தளின் நின்னை அருளில் அணங்கான் மெய்வேல் தின்னும் விறல் வெய்யோன் ஊர்மயில்வேல் நிழல்நோக்கி அறவர் அடிதொடினும் ஆங்கவை சூளேல் குறவன் மகளாணை கூறேலோ கூறேல்

ஐய சூளின் அடிதொடு குன்றொடு

வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல்”

71

வை

"யார் பிரிய? யார் வர? யார்வினவ? யார் செப்பு?" தலைவனும் தோழியும் உரையாடலாக வரும் பரிபாடல் (8:57- 72) நாடக இயல்பில் இப்பாடல் நடத்தல் கண்டு கொள்க.

பரிபாடலிசை :

பிற்காலத் தேவாரப் பன்முறை, வழிவழியாக வரும் ஓதுவார்களாலும், இசைத்தமிழ்வல்ல அறிஞர்களாலும் பண்ணாய்வுத் திறவோர்களாலும் ஓராற்றாற் கண்டு உயிர்த்தெழச் செய்தற்கு வாய்த்துள்ளது. ஆனால், பரிபாடல் பண்ணியல் அறிந்து தெளிவிப்பார் அரியர், ஆயின், அம்முயற்சியில் ஊன்றும் அறிஞர்களுக்கு அறவே தடமழிந்து போகாவண்ணம் பண்ணின் பெயரேனும் கிடைத்திருத்தலான் அத்தடம் பற்றிச் சென்று கண்டு கொள்ளவும் வாய்க்கலாம். கலையொன்று இடையறவு படின் மீள நிலை பெறுத்தலின் அருமைக்கு எடுத்துக் காட்டாக இருப்பவற்றுள் இப்பரிபாடல் இசையும் ஒன்று எனல் தகும்.

ஊழையும் உப்பக்கம் காணும் உலையா முயற்சியாளரும் உளராகலின் மறைந்துள்ள பரிபாடல் இசை மீளவும் உலாக் கொள்ளும் காலம் வரக்கூடும் என நம்பலாம். அந்நம்பிக்கை வெல்வதாக!