உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு

செவ்வேள் பற்றிய பரிபாடல்கள்

ஐந்தாம் பரிபாடல் :

பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கித்

தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து

நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்றுணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை மாய அவுணர் மருங்கறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில்வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மாலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள் வேல னேத்தும் வெறியு முளவே; அவை, வாயுமல்ல; பொய்யு மல்ல; நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய்; சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்பாகலும்

பிறப்பினுள் இழிபாகலும்

ஏனோர்நின் வலத்தினதே;

ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து

நாக நாணா மலைவில் லாக

மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய