உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப் பாக முண்ட பைங்கண் பார்ப்பான் உமையோடு புணர்ந்த காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி இமையா நாட்டத் தொருவரங் கொண்டு விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த தரிதென மாற்றான் வாய்மைய னாதலின் எரிகனன் றானாக் கடாரிகொண் டவனுருவு திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக் கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து வசித்ததைக் கண்ட மாக மாதவர்

மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற் சாலார் தானே தரிக்கென அவரவி யுடன்பெய் தாரே யழல்வேட் டவ்வலித் தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில் வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள் கடவுள் ஒருமீன் சாலினி யொழிய அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர் மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற்கு லினரே நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப் பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் பெரும் பெயர் முருகநிற் பயந்த ஞான்றே அரிதமர் சிறப்பின் அமரர் செல்வன்

எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென

அறுவேறு துணியும் அறுவ ராகி

ஒருவனை வாழி ஓங்குவிறற் சேஎய் ஆரா வுடம்பினீ அமர்ந்துவிளை யாடிய போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரிவித்

73