உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன் திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித் திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன் ஆஅங், கவரும் பிறரும் அமர்ந்துபடை யளித்த மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமு மரனும் வாளும் செறியிலை யிட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும் வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு

மறுவில் துறக்கத் தமரர்செல் வன்றன்

பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம் பிகந்தோய்

நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை, செறுதீ நெஞ்சத்துச் சினநீடி னோரும்,

சேரா வறத்துச் சீரி லோரும்,

அழிதவப் படிவத் தயரி யோரும்

மறுபிறப் பில்லெனும் மடவோருஞ் சேரார்

நின்னிழல் அன்னோ ரல்ல தின்னோர்

சேர்வா ராதலின் யாஅம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனு மூன்றும்

உருளிணர்க் கடம்பன் ஒலிதா ரோயே,

கடுவ னிளவெயினனார் பாட்டு; கண்ணாகனார் இசை; பண்ணுப் பாலை யாழ்.

எட்டாம் பாடல் :

மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புண்மிசைக் கொடியோனும், புங்கவ மூர்வோனும், மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும் மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும்

ஆதிரை முதல்வனிற் கிளந்த

நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும் யாவரும் பிறரு மமரரு மவுணரும்