உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் பற்றா கின்றுநின் காரண மாகப்

பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும் இமயக் குன்றினிற் சிறந்து நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை மின்னீன்ற விளங்கிணர் ஊழா

ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின்

அருவிதாழ் மாலைச் சுனை;

முதல்வநின் யானை முழக்கங் கேட்க

கதியிற்றே காரின் குரல்;

குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ

மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப ஏதிர்குதிர் ஆகின் றதிர்ப்பு மலைமுழை; ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்னவினம் வீழ்தும்பி வண்டொடு மிஞிறார்ப்பச் சுனைமலர்க் கொன்றை கொடியிண ரூழ்ப்பக் கொடிமலர் மன்றல மலர மலர்காந்தள் வாய்நாற நன்றவிழ் பன்மலர் நாற நறைபணிப்பத் தென்ற லசைவரூஉஞ் செம்மற்றே யம்மநின் குன்றத்தாற் கூடல் வரவு;

குன்ற முடைத்தவ் வொளிர்வேலோய் கூடல் மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்பெழக் காலொடு மயங்கிய கலிழ்கடலென

மால்கடல் குடிக்கு மழைக்குரலென

ஏறதிர்க்கு மிந்திர னிருமுருமென மன்ற லதிரதிர மாறுமா றதிர்க்குநின் குன்றங் குமுறிய வுரை:

தூதேய வண்டின் றொழுதி முரல்வவர்

காதன்மூ தூர்மதில் கம்பலைத் தன்று வடுவகிர் வென்றகண் மாந்தளிர் மேனி நெடுமென் பணைத்தோட் குறுந்தொடி மகளிர்

ஆராக் காம மார்பொழிற் பாயல்

வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி

முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்

75