உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

நகைசான்ற கனவன்று நனவன்று நவின்றதை

இடுதுனி கையாறா வெற்றுயர் கூரச்

சுடுமிறை யாற்றிசி னடிசேர்ந்து சாற்றுமன்

மிக, ஏற்றுதுமல ரூட்டுதுமவி

தோற்றதும் பாணி எழுதுங் கிணைமுருகன்

தாட்டொழு தண்பரங் குன்று;

தெரியிழாய் செல்கென்றாய் எல்லாயாம் பெற்றேம் ஒருவர்க்கும் பொய்யாநின் வாயில்சூள் வௌவல் பருவத்துப் பன்மாணீ சேறலிற் காண்டை எருமை யிருந்தோட்டி எள்ளீயும் காளை செருவஞ் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி அருள்வயினாற் றூங்கு மணிகையாற் றாக்கி நிரைவளை ஆற்றிருஞ் சூள்;

வளைபொரு சேட்சிமை வரையகத்தால்

தளிபெருகுந் தண்சினைய

பொழில்கொளக் குறையா மலரக்

குளிர்பொய்கை யளறுநிறைய

மருதநளி மணன்ஞெமர்ந்த நனிமலர்ப் பெருவழிச்

சீறடியவர் சாறுகொள வெழுந்து வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும் நாறுகமழ் வீயும் கூறுமிசை முழவமும் மணியுங் கயிறு மயிலுங் குடாரியும் பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி அருவரைச் சேராத் தொழுநர்

கனவிற் றொட்டது கைபிழை யாகாது

நனவிற்சேஎப்பநின் னளிபுனல் வையை

வருபுனல் அணிகென வரங்கொள் வோரும்

கருவயி றுறுகெனக் கடம்படு வோரும்

செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும்

ஐயம ரடுகென வருச்சிப் போரும்

பாடுவார் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும் மஞ்சாடு மலைமுழக்கும்

77