உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

“கொந்தள மாக்கிப் பரக்கழித்து”

(நாச்சியார் திருமொழி 12:3)

""

“நின்மலனென்றோதிப் பரக்கழிந்தான்'

91

(பெரிய திருபெமாழி 4.8:5)

“பரக்கழி இது நீ பூண்டாற் புகழையார் பரிக்கற் பாலார்"

(கம்ப.வாலி.79)

பரக்கு என்பதற்குப் பரவிய புகழ் எனப்பொருள் கண்டோம். இச்சொல்லும் பொருளும் அகராதியில் இனிமேல்தான் ஏறவேண்டும்.

'ஒளி' என்பதொரு சொல்லின் பொருளை விளக்கும் பண்டையுரையாசிரியர்கள், "தாம் உளகாலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதல்" என்பர். (திருக். ப. 653, 971; நால். 9. பது). 'புகழ்' என்பதற்குத் "தான் இறந்த காலத்தும் உளதாம் உரை" என்பர் (நால. 9 பது.)

ளியினும் புகழ் விரிந்தது என்பதை, "உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் என்று நாலடியார் கூறும். இதனைப் பரிமேலழகரும் தம் உரையில் எடுத்தாள்வார். இதனால், 'பரக்கம்' விரிவு என்னும் பொருள் தருவதுடன் புகழ்ப் பொருளும் தருதல் அறிந்து இன்புறத் தக்கதாம்."மண்தேய்த்த புகழ்” என்னும் சிலம்புத் தொடருக்கு "பூமிசிறுகும்படி வளர்ந்த புகழ்" என அரும்பதவுரைகாரரும், "புகழ் வளரப்பூமி சிறுகலான் அடியார்க்கு நல்லாரும் உரைத்தமை அறியத் தக்கன.

பரக்கும் :

என

'பரக்கும்' என்பது, பரவும் என்னும் பொருள்தரும் சொல். "ஆனிற்பரக்கும் யானைய முன்பிற், கானகநாடன்," என்பது புறப்பாடல் (5) 'பரக்கும்' என்பது பரவுதல் பொருளது. ஆக்கள் பரவித் திரிவதுபோல் யானைகள் திரிகின்றனவாம் மலை நாட்டில்! இவ்வாறே பரக்க, பரத்தல் என்பனவும் இ ப் பொருளனவே.

'பரக்கவென் பகர்வது' என்னும் கம்பர் வாக்கு (சடாயு. 11) விரிவாய் எனவும்,

"செம்புற மூதாய் பரத்தலின்" என்னும் அகப்பாடல் (134) பரவுதலின் எனவும் பொருள் தருதல் அறிக.