உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரசுதல் :

வேர்ச்சொல் விரிவு

93

'பரசுதல்' என்பதொரு தொழில். உழவர் களத்தில் பரசுதல் பணியுண்டு. சோளம், கேழ்வரகு, கம்பு முதலிய தவசக்கதிர்கள், உழுந்து, துவரை, மொச்சை முதலிய பயற்று நெற்றுகள் ஆகியவற்றைப் பரசிக் காயவைப்பர். அவற்றைத் தட்டித் தூற்றிய பின்னரும் பரசிக் காயவிடுதல் உண்டு. பரசுதல் படரக்கிளறிக் காயவிடுதலாம்.

பரசு அடித்தல் தொழிவேலையில் உண்டு. தொழிக் கலக்கிக் குழைமிதித்தபின் நிலத்தை ஒப்புரவாக்குதற்குப் பரசடித்தல் உண்டு. அதனை அடித்தற்குரிய செயல் 'மரமடித்தல்' எனப்படும்.

பரசு :

மிகுதியான தவசம் களத்தில் காய காய வைக்கவேண்டி இருந்தால் கையால் பரசி விடமுடியாது. அதற்கு வாய்ப்பாகப் ‘பரசு' என்னும் ஒரு கருவியுண்டு. கீழ்வாயில் அகன்ற தகடும், அத் தகட்டைப் பொருத்திய பொருத்துவாயில் இருந்து நெடுங்கம்பு மாக அமையும். அதற்குப் பரசு என்பது பெயர். அரிசி அரைவை ஆலைகளில் உலரப் போடுவதற்குப் பரசுவாரும், பரசினைப் பயன்படுத்துவர். அக்கருவியும் அவ்வினையும் பரசு, பரசுதல் எனப்படுதல் பரவுதல் பொருளதே.

'பரசுராமன்' என்பான் கையிலுள்ள 'பரசு', என்னும் கருவி வாய் ஏனைக்கோடரி, கண்டகோடரி என்பவற்றிலுள்ள வாய்களின் அகலத்தினும் அகன்றதாக இருத்தல் அறியத் தக்கது.

‘பரசு' என்பதற்கு மூங்கில் என்பதொரு பொருள். ஓரடியில் இருந்து பலப்பல சிம்புகள் வெடித்துப் பண்ணையாகப் பரவுவது மூங்கில். நூறு இருநூறு என மூங்கில்கள் புதராக மண்டிக் கிடத்தல் காணக் கூடியது.

கதிரோனைச் சுற்றித் தோன்றும் ஒளிவட்டத்திற்குப் 'பரசு' என்பதொரு பெயர். 'பரிவேடம்' என்பதும் அதன் மற்றொரு பெயர். பரசு என்பதற்கு ஏற்பப்பரவி அகலுதலும், 'பரி' என்பதற்கு ஏற்ப வளைதல் உடையதுமாம் பொருளைத் தரும்.

.

பரசு என்பதற்கு ஓடம் என்னும் பொருளும் உண்டு. ஆழ அகலமில்லா ஆறுகளில் பரவினாற்போல அல்லது பரசினாற் போலச் செல்லும் ஓடம் பரசு எனப்படுகிறது. பரசை என்பதும் அதன் பெயர்.