உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பரசுதல், பராவுதல் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

விரிந்த அளவில் செய்யப்படும் இறைவழிபாடு 'பராவுதல்' எனப்படும். தெய்வம் பராஅ வுதல் என விளக்கமாகவும் வழங்கும். தெய்வம் பராவுதல் எனவும் வழங்கும். அதனைச் செய்வார் 'பராவுநர்' 'பரசுநர்' என வழங்கப்படுவர்.

'தெய்வம் பராய்' என்னும் எச்ச நிலையில் நிற்றலும், இலக்கிய வழக்கே.

'தெய்வம் பராதல்' என்பதோர் அகத்துறை. காதல் கொண்ட ஒரு தலைமகள், தலைமகனையே தெய்வமாக வழி படுதல் அன்றிப் பிறதெய்வம் வழிபடாள் என்னும் கொள்கை யால் அவள் காதலை உய்த்துணரச் செய்யும் வகைகளில் ஒன்றாம் அது. இவையெல்லாம் கும்பிடுதல், வணங்குதல் என்பவற்றில் விரிந்த வாழ்த்து ஆதல் அறிந்து கொள்க.

பரஞ்சம் :

செக்கு உரல் ஊடே இருக்க, அதன் சுற்றுவிரிவு பெரிது. செக்கைச் சுற்றி விரிந்து செல்லும் பரப்பைக் கொண்டு அதற்கு அமைந்த பெயர் 'பரஞ்சம்' என்பது. நீரில் தோன்றி விரியும் நுரைக்கு 'பரஞ்சம்' என்னும் பெயருண்டு.

பரட்டை :

தலைசீவாமல் எண்ணெய் தேய்க்காமல் இருந்தால் தலைமுடி படியாமல் எழும்பிக் கிடக்கும். அதனைப் 'பரட்டை' என்பர். பரட்டைத்தலை தன் அளவில் பரவி விரிந்து காட்சியளித்தல் வெளிப்படை. அவ்வாறே இலைகுழை கவிந்து இறங்காமல் மேலேயும் பக்கத்தும் விரிந்து தோன்றும் மரம் ‘பரட்டை மரம்' எனப்படுதல் வழக்கு. மொட்டைக்கும் பரட்டைக்கும் முரணுதல் நிலை. பரட்டை என்பதற்குச் செடி முதலியன தலை பரந்து நிற்கை என்னும் செ.ப.க.அகராதி.

பரட்டயம் :

பரட்டயம் என்பதோர் உடை வகையைச் சூளாமணி சுட்டுகிறது; அதற்கு 'ஒட்டுச் சல்லடம்' எனக் குறிப்புரையுளது.

“ஒட்டிய கலிங்கம் தாள்மேல் திரைத்துடுத் துருவக் கோடிப்

பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டயம் நரல வீக்கிக், கட்டிய கழலர்'

""