உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

95

என்பது அப்பாட்டு (842) 'நரல வீக்கி' என்றதால் ஒலிக்குமாறு இறுக்கக் கட்டி என்னும் பொருள்பட வரும். அது, கழலுக்குக் கீழே பரட்டில் ஒலிகிளருமாறு அணியப்படும் ஓரணி எனக் கொள்ளலாமோ என எண்ண வேண்டியுள்ளது.

'பரட்டைக் கீரை' என்பதொரு கீரையைப் பதார்த்தகுண சிந்தாமணி கூறுகிறது (603). அதன் அமைப்பைக் கருதிய பெயராக இருக்கலாம்.

பரடு :

காலின் ஒரு பகுதிக்குப் 'பரடு' என்பது பெயர். அது கரண்டை எனப்படும். கணுக்காலுக்குக் கீழே படர்ந்து விரியும் அடியின் மேல்பகுதியே பரடாம். இதனைப் 'படம்' என்று வழங்கும் வழக்கால் அதன் அகலம் அறியப்படும். "படத்தைத் தேய்த்துக் கழுவு; எவ்வளவு அழுக்கு, பார்" என்பது குழந்தை களைக் குளிக்க வைக்கும் தாய்மார் உரை.

"இடைச் செறி குறங்கு கௌவிக் கிம்புரி இளக மின்னும் புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்போ டார்ப்ப

என்பது சிந்தாமணி (2445)

பரடன் :

ஓரிடத்து நிலைத்து வேலை செய்ய வாய்க்காமல் பலப் பலரிடம் பலப்பல இடங்களில் அப்பொழுதைக்கப்பொழுது வேலை செய்யும் கூலியாளன் 'பரடன்' எனப்படுதல் அவன் தொழில் நிலை கருதிய பெயராம்.

பரண், பரணை :

காட்டுக் காவலுக்காகக், கால்கள் ஊன்றிக் கம்புகளைப் பரத்திச் செய்யப்படும் காவல்மேடை பரண் எனப்படும். 'பரணை' என்பதும் அதுவே. கூரை வீடுகளின் சுவர் மட்டத்தில் கம்புகளைப் பரம்பிப் பலகையடைப்புச் செய்து பரண் ஆக்குவதும் உண்டு. அதில் பழம் பொருள்கள், விறகு முதலியவற்றைப் போட்டு வைப்பது வழக்கம்.

பரண்களை மரத்தின்மேல் அமைக்கும் வழக்கமும் உண்டு. மரக்கிளைகள் இரண்டு மூன்றைக் கழிகளாலும் குச்சிகளாலும் ணைத்துப் படல் பரப்பிவைப்பர். இது பெரும்பாலும் காட்டின் அடிவாரங்களில் அமைக்கப்படும். இவ்வழக்கம் பண்டே உண்டு என்பது,