உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த

புலியஞ் சிதணம்”

எனக்குறிஞ்சிப் பாட்டில் (40-41) சொல்லப்படுகிறது.

இதணம் என்பது 'பரண்'

“கலிகெழு மீமிசைச் சேணோன்” எனவரும் சிலம்புக்கு (25 : 30) ச்,

"சேணோன் - பரணின் மேலோன்"

என அரும்பத வுரைகாரர் பொருள் எழுதியமை அறியத்தக்கது. 'இதண்' என இப்பரண் குறிக்கப்பட்டாலும் கம்பர்,

“தொடர் மஞ்சம் போலுள பரண்”

என ஆள்கிறார் (அயோத். 673). இனிப்பரணம் என்பதும் பரணைக் குறிப்பதேயாம்.

பரண்டுதல் :

களைகுத்துதல், களைகிள்ளுதல், களைஎடுத்தல், களை பறித்தல், களைவெட்டல் இன்னவாக வழங்கும் ஒருவினைப் பல கூறுகளுள், களைபரண்டல் என்பதும் ஒன்று. அதற்கு உரிய கருவி களைபரண்டி. களை சுரண்டியினும் விரிந்த இலையுடையது களைபரண்டி; களைகொத்தி இடப்பரப்பைச் சுருக்கி ஆழ்ந்து செல்லும். களைபரண்டி இடப்பரப்பை விரித்து, மேலால் தடவிச் செல்லும். களைசுரண்டிம் மேலால் நிலத்தை வழித்துச் செல்வதே. எனினும் பரண்டியின் அளவுக்குக் குறைந்தது. எலி துளைத்தல், ஓரிடத்துத் தோண்டுதல், எலி பரண்டல் அகலமாகக் கிளைத்து எறிதல். பரண்டுதலுக்கு விரிதல் பொருள் உடைமை இவற்றால் விளங்கும்.

பரண்டை:

பரடு என்னும் பொருள் தரும் சொல் 'பரண்டை' என்பதாம். பரண்டை என ஒரு பறவை உண்டெனச் 'சர்வார்த்த சிற்ப சிந்தாமணி' என்னும் நூல் கூறுகின்றது. (16)

“பரண்டை வலத்திற் பாடி வலத்திருந் திடத்திற் போந்து"

என்பது அது. இருபாலும் சிறகு பிறபறவைகளினும் விரிந்தியலும் தன்மையால் இப்பறவைக்கு ப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அன்றிப் பரண்டுதல் உடைமையாலும் பெயர் பெற்றிருக்கலாம்.