உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

97

சில பறவைகள் காட்டுச் செடிகள் தூறுகள் ஆகியவற்றின் அடிப்பகுதியில் பரண்டிக் குழியாக்கி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் உண்டு என்பதை அறியின் இவ்வூகம் கொள்ளத் தக்கதாம்.

பரணசாலை :

1

பரண், பரணை என்பவற்றை முன்னே அறிவோம். அப்பரண், ஊன்றியகால்களின்மேல் அல்லது மரக்கிளையின் மேல் அமைக்கப்பட்டவை. இப்பரண சாலையோ, கால்களை நேர்கால்களாகவோ, முகடு கூட்டுதலாகவோ ஊன்றி, இலை தழை புல்களால் வேய்ந்து வைக்கப்படுவதால் குச்சிகளை ஊன்றிச் செய்யப்படுவதால் 'குச்சில்' எனப்படும். பூப்படைந் தாளுக்கெனத் தனிக்குச்சில் அமைப்பதும், அதில் அவளை இருக்க வைப்பதும் உண்டு என்பதைக் 'குச்சிலுக்குள் இருக்கிறாள்' என்று கூறும் வழக்கம் வெளிப்படுத்தும். பூப்புவிழா முடிந்தபின் குச்சிலை எரித்தல் சில மலைவாணர் வழக்கென்பது அறியத் தக்கது.

“சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையுள் இருந்தாள் ஐய தவம்செய்த தவமாம் தையல்’

(சுந்.திருவடி தொழுத. 64)

எனவரும் கம்பர் வாக்கு 'பரண சாலை'யமைப்பை விளக்கும்.

காடுகாவலரும் ஏரிகாவலரும் களங்காவலரும் 'குச்சில்' அமைத்தலும், மாறி மாறி இரவு பகலாகக் காவல் இருத்தலும் இந்நாளிலும் காணக்கூடிய காட்சிகளே.

இனிப் 'பன்ன சாலை' என்பதொரு பெயரும் அதற்குண்டு. பன்னுதல், பின்னுதல், ஓலை லை தழைகளைக் கொண் பன்னுதலால் வந்ததென்க. 'பன்னக காலை' என்பதும் அது.

"இவன், கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்லவாயவே" என்பதொரு பழைய இராமாயணப் பாடல் (புறத். 725).

பரணம் :

'பரணம்' என்பதற்குத் தாங்குதல் என்பதொரு பொருள். வறியராய் வந்தாரை வரவேற்று உதவும் பேருளமே இவண் பரணமாதல் அறிக. "அடுக்கிய மூவுலகும் கேட்குமே கொடுத்தார் எனப்படுஞ் சொல்" என்பது நாலடிப்பாட்டு. புகழ் பரவுதற்கு