உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

னாக இருக்கும் கொடையைப் 'பரணம்' என்றமை அதன் பரவுதல் தன்மை கருதியதேயாம். இனி, மார்பகம் முழதுறத் தழுவிக் காவற்கடன் செய்யும் மெய்ம்மறை (கவசம்) பரணம் எனப்படும். பரணி என்னும் விண்மீனும் பரணம் எனப்படும் என்று கூறுகின்றன அகராதிகள். அதன் பொருட்பொருத்தம் பரணியிற் காண்க.

பாணர் :

கழகக் காலப் பெரும் புலவருள் ஒருவர் பரணர் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் இவர் பாடல்கள் உண்டு. “கபில பரணர்” எனச் சான்றோரால் எடுத்தாளப்படுதல் இவர்தம் புலமைச் சிறப்பையும் கபிலர்க்கும் இவர்க்கும் இருந்த பெருங்கிழமையையும் உரைக்கும். "இன்றும் பரணன் பாடினன் மற்கொல்" எனவரும் (புறம் 99) ஒளவையார் மொழி, பரணர் தம் சிறப்பினை நன்கு பகரும்.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியதற்குப் பரிசிலாக, உம்பற்காட்டு வருவாயைப் பரணருக்கு உவந்து தந்ததுடன், தன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாக வழங்கினான் எனவரும் செய்தி (பதிற். பதி.5) பின்னவனை மன்னவன் தகுதி ஆக்குதற்கு வல்லவர் இன்னவரே எனத் தேர்ந்து செய்த சீர்த்திச் செயலாம். இவர் காலத்திற்குப் பின்னரும் இவர் பெயரால் பலர் இருந்து பரவு புகழாளராகத் திகழ்ந்தமை இவர் புகழை மலைமேல் விளக்கெனக் காட்டும். இனி, "இவர் பரணி நாளிற் பிறந்தாராதல் வேண்டும். அது கருதி இப்பெயர் பெற்றார் என்பார். ஆயின், “பரணியா”ராக இருப்பாரேயன்றிப் பரணர் எனப் படார் என்பது தெளிவான செய்தி.

வரலாற்றுச் செய்திகளைத் தம் பாடல்களில் விரித்தும் சுட்டியும் செல்லும் இப்புலவர் பெருமகனார் நாடளாவிய புகழாளராகத் திகழ்ந்தார் என்பது ஒருதலையாம். அச்சிறப்பே இவரைச் சான்றோர்களால் 'பரணர்' என வழங்குமாறு செய்த தாம் எனலாம். நம் கண்காணப் 'பெரியார்' என ஒருவர் பெயரே அமைந்துவிடவில்லையா! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பெரியாழ்வார் என ஒருவர் பெயர் இருந்ததில்லையா?