உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி :

வேர்ச்சொல் விரிவு

99

பரணி என்பதொரு விண்மீன்; அடுப்பு-முக்கூட்டுக்கல் போன்ற அமைப்பு உடைமையால் பரணி என்பது 'அடுப்பு' எனவும் படும்; அடுப்பு என்னும் சொல்லுக்குப் பரணி என்னும் பொருளும் உண்டாயிற்று. பரிய சாடியும், சிலந்திக் கூடும், ஏரி நீர்ப் பெருக்கை வழிய விடும் மதகும், கால் கைகளை அகற்றிச் சுருக்கி ஆடும் கூத்தும் ஆகியவை பரணியின் பொருளன. இவை பரவுதல், அகலுதல், விரிதல் பொருண்மையுடையவை என்பதை அறிக. அடுப்புத் தனித்து ஒன்றாக வைக்கும் வழக்கமில்லை என்பதை அறியின் பிள்ளையடுப்பு அல்லது குட்டியடுப்பு,பக்க அடுப்பு, கொடியடுப்பு என அடுப்புகள் உண்மை விளங்கும்.

“பரணி அடுப்புப் பாழ்போகாது"

“பரணியிலே பிறந்தால் தரணி யாளலாம்”

என்னும் பழமொழிகளும்,

66

'தரணி காவலன் சச்சந்தன் என்பவன்

பரணி நாட்பிறந் தான்பகை யாவையும் அரணி லான்

99

- 1:13

என்னும் சிந்தாமணியும், "இன்ன நாட்பிறந்த இன்னான் என்றல் அரசர்க்கு மரபு; பரணி, யானை பிறந்த நாளாதலின் அது போலப் பகையை மதியான் என்றாள்" என்னும் நச்சினார்க்கினி யர் விளக்கவுரையும், "பரணியான் பாரவன" என்னும் மயிலை நாதர் உரையும் (நன். 150) இவண் கருதிக் கொள்ளத்தக்கன. பரணி நூல் :

66

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவ னுக்கு வகுப்பது பரணி”

என்பது பரணி நூல் இலக்கணம். களப்போரில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் விரிபுகழ் வீரனுக்குப் பாடப் படுவது 'பரணி' எனின் அதன் விரிவுப் பொருள் வெளிப்படையே. 'பரணி நாள்' பரணிக்குரிய காளி இன்னவும் பரணிச் சொல்லுக்கு உட்பட்டனவே. பரவுதல் பொருளனவே. மார்பளவில் விரிந்த கேடயம் பரணிப் பெயரதாதல் கண்டதே.

"வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர் செயங்கொண்டான்" எனவரும் பாராட்டுப் பாடல் பரணி பாடிய செயங்கொண்டார் சிறப்பை வெளிப்படுத்தும்.