உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

பரத்தமை :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கட்டினின்றிப் பலரின்பம் தேடிவாழும் வாழ்வைப் 'பரத்தமை’ வாழ்வென்பது பழமை தொட்டே வரும் வழக்கு.

“நண்ணேன் பரத்த நின் மார்பு”

என்பது திருக்குறள் (1311).

'பரத்தந்து' என்பதொரு சொல் பரிபாடலில் வருகின்றது (7, 39) அதற்குப் பரிமேலழகர் 'பரக்க' என உரை எழுதினார். 'பரத்தர’ என்னும் சொல்லைக் கலியும் புறமும் (106: 274) வழங்குகின்றன. பரத்தலைச் செய்யும்படி என்பது இதன் பொருளாம் (கலி. நச்).

பரத்தல் பரத்தருதல் போல வந்தவை பரத்தன். பரத்தை, பரத்தர், பரத்தைமை என்னும் சொற்களாம். 'நகரப் பரத்தர்' எனப் பரத்தரை இடஞ்சுட்டியுரைக்கிறார் இளங்கோவடிகளார். (சிலப். 5:200) “பரத்தர், கழிகாமுகர்" என்றார். இதற்கு உரை விளக்கம் தரும் அடியார்க்கு நல்லார். இனிப் பரத்தர் இயன்மையை விளக்குவார்போல, 'வம்பப்பரத்தர்' என்றார் அடிகளார். (16 : 63) அதற்கு விளக்கம் வரையும் அடியார்க்கு நல்லார், "வம்பப் பரத்தர் புதிய காம நுகர்ச்சியை விரும்புங் காமுகர்; பரத்தையை நுகர்வானும் பரத்தன்" என்றார். இத்தன்மை, "பண்பில் காதலன் பரத்தமை" என மணிமேகலையில் இடம் பெறுகின்றது (7:50)

-

போன போக்கிலே பரந்துபோம் வெள்ளத்தையும், கோலக் குறுங்கணும் (சாளரம்) நுழையும் தென்றலையும் முறையே பரிபாடலும், சிலம்பும் உவமை காட்டுவது கொண்டே, உண்மை தானே விளங்கும். பரத்தன் முதலாய இச்சொற்கள் பரவுதல், அப்பால், அப்பாலுக்கு அப்பால் எனவரை துறையின்றி அகலுதல் என்னும் பொருட்பட அமைந்திருத்தல் அறியத்தக்கனவே.

-

அறிவராயினும், தவத்தராயினும், புதிது புதிதுண்ணும் வண்டுபோலும் காமுகராயினும் 'கண்வலை'யால் பற்றிப் பிடிக்கும் கலை வல்ல எண்ணெண் கலைவல்ல பரத்தையரைச் சுட்டுகிறார் இளங்கோவடிகளார். அவர்களைத் 'தளியிலார்’ என்றும் பதியிலார் என்றும் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரைக்கின்றனர். (சிலப்.14 : 160; 167). பராகந்தேடியுண்ணும் வண்டுக்கு உவமை கூறிய ஒன்றால் கண்டு கொள்ளலாமே.