உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரத்தையிற் பிரிவு :

வேர்ச்சொல் விரிவு

101

பாலைத்திணை என்பது பிரிதல் ஒழுக்கம் பற்றியது.

அப்பிரிவு வகைகளை,

'ஓதல் பகையே தூதிவை பிரிவே"

(அகத். 25)

"பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே" (அகத். 33)

"காவற் பாங்கு பரத்தையின் அகற்சி' (அகத்.41) எனப் பலதிறப்பட ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்தாராகப் பின்னுளோர், பரத்தையிற் பிரிவென ஒரு பிரிவாக்கியதுடன், இல்வாழ்க்கையே பரத்தையிற் பிரிவே" என முதன்மை தரவும் ஆயினர். சேரிப் பரத்தை, இற்பரத்தை எனப் பிறபிற பெயரிட்டு வழங்கும் வழக்கும், பழநாள் தொட்டே ஆயிற்று. அதனை முதற்கண் கடிந்து கொடிதூக்கி முழக்கமிட்டவர் முதற்பாவலரே என்பது இவண் எண்ணத்தக்கது.

பரத்தி :

பரத்தி என்பதொரு சொல், பரத்தமை சுட்டாப் பொருளில் வழங்குகின்றது. அது பரவை எனப்படும் கடலாளுகையுடைய பரதவர் குடிப் பெண்மகளைக் குறிப்பது. பரதவர் 'பரவர்' ஆகியபின் அவர்தம் பெண்டிர் 'பரத்தி' எனப்பட்டனர் என்க. பரவர் படவர் எனவும் செம்படவர் எனவும் வழங்குதல் இவண் அறிக.

பரத்தை :

இனிப் பரத்தை என்றொரு சொல் பரத்தமை குறியாப் பொருளில் வழங்குகின்றது. அது சொல்லின் முழு வடிவற்ற சொல். செம்பரத்தை என்பதன் குறைச்சொல்.

பரந்தோர் :

'பரந்தோர் எல்லாம் புகழ' என்று புறநானூற்றில் வரும் 'பரந்தோர்' பரவி நின்றோர் என்னும் பொருளதாம் (285) ‘பரந்தோர்’ அறிவான் விரிந்தோர் என்றும், புகழால் விரிந்தோர் என்றும் பொருள்தர ஆட்சியில் உண்டு. "இருங்குன்றென்னும் பெயர்பரந் ததுவே" என்னும் பரிபாடல் (15:35) 'பெயர் பரந்தது' என விளக்கிக் காட்டுதல் அறிக. "பரந்து படு நல்லிசை எய்தி' என்னும் புறநானூறும், "பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி" என்னும் அதன் உரையும் இவண் கருதத்தக்கன (213).