உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

டங்

புலவர், தொன்மொழிப்புலவர், நூல்நவில் புலவர், நுணங்கு மொழிப் புலவர் என்றும் இன்னவாறாக நானூறு களுக்கு மேல் முந்து நூலாரைக் குறிக்கும் தொல்காப்பியர் குறிப்பே, அவர்க்கு முந்து நூல் ஒன்று அன்று என்றும், அகத்தியம் என்னும் பெயரியது அன்று என்றும் திட்டமாக உரைக்கும். அவ்வாறாகவும் அகத்தியம் எவ்வாறு இடம் பெற்றது?

உரையாசிரியர் எனப்படுபவர் இளம்பூரணர். அவரே தொல்காப்பிய முதல் உரையாசிரியர். அதனாலேயே அப்பெயர் பெற்றார். அவர் "முந்து நூல்" என்பதற்கு "முதல் நூல்" என்று பொருளும், "முந்து நூல் கண்டு எனவே வழியும் என்று விளக்கமும் வரைந்தார்.

அவரே, 'தமிழ் கூறும் நல்லுலகம்' என்னும் பாயிரத் தொடர்க்குத் "தமிழ் கூறும் நல்லாசிரியரது என்றவாறு; நல்லாசிரியர் அகத்தியனார் முதலாயினோர்; உலகம் என்பது ஆசிரியரை" என உரையும் விளக்கமும் வரைந்தார்.

இதனால் தொல்காப்பியர்க்கு முன்னே இருந்தவர் அகத்தியனார் என்னும் எண்ணம் அவர்க்கு இருந்தது என்பது தெளிவாகின்றது. ஆனால், முந்து நூல் அகத்தியம் எனக் குறித்தார் அல்லர் என்பதும் நினைவு கொள்ளத் தக்கது.

முந்துநூல் என்பதற்கு முன்னை இலக்கணங்கள் என உரைவரையும் நச்சினார்க்கினியர், உரை விளக்கத்தில், "முந்து நூல் அகத்தியமும் மாபுராணமும் பூத புராணமும் இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்து சொல் பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலும் சோதிடமும் காந்தருவமும் கூத்தும் பிறவுமாம்" என்கிறார்.

மூல நூல் ஆசிரியரோ பாயிரம் பாடியவரோ, முதல் உரையாசிரியரோ குறிப்பாகக் கூடச் சுட்டாதவற்றை நச்சினார்க் கினியர் சுட்டுதல் வியப்பும் திகைப்பும் தருவனவாம், அவ்வியப்பு திகைப்புகளைத் தான் ஏற்றுக்கொண்டு நடையிடுகின்றது இறையனார் களவியல் உரை. ஏனெனில் நச்சினார்க்கினியர் உரைக்கு முற்பட்ட உரை இறையனார் களவியலுரை ஆயிற்றே.

முச்சங்க வரலாற்றை வரையும் அவ்வுரை தலைச் சங்கத்தார்க்கு "நூல் அகத்தியம் என்ப" என்றும் இடைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூத புராணமும் என