உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

147

வை என்றும், "கடைச்சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்ப" என்றும் கூறுகின்றது. அவ்வுரை யை அவ்வாறே வழிமொழிவதென அடியார்க்கு நல்லார் உரையும் அமைந்துள்ளது (சிலப்பதிகார உரைப்பாயிரம்). ஆக நச்சினார்க்கினியர் காலத்துக்கு முன்னரே அகத்தியம் முந்து நூல் என்னும் எண்ணம் உண்டாகியுள்ளமை தெளிவாகின்றது.

தொல்காப்பியத்தில் மட்டும் அன்றிப் பாட்டு தொகை களிலும் அகத்தியர் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

பரிபாடலில் ' பொதியின் முனிவன்' எனவரும் தொடர்க்கு (11:11) அதன் உரையாசிரியர் பரிமேலழகர் 'அகத்தியன் என்னும் மீன்' என உரை வரைந்துள்ளார். அது மூலநூல் ஆட்சி ஆகாது.

அமர முனிவன் அகத்தியன்' என்பது மணிமேகலையில் வரும் தொடர். தமிழ் இலக்கண இலக்கியப் பரப்பில் அகத்தியனைப்பற்றிய முதல் ஆட்சியே இதுதான்.

பொதியம்,தவமுனி,

சிலம்பிலும் மூல ஆட்சி இல்லை. பொதியம், தவமுனி, திருமுனி எனவரும் இடங்களில் அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரைகாரரும் அகத்தியன் எனக் கூறுகின்றனர். ஆனால், வடமொழி நூல்களில் அகத்தியன் பெயராட்சி பழமை தொட்டே உள்ளமை அறியவருகின்றது. இதுபற்றித் தமிழ் வரலாறுடையார் கூறுவது வருமாறு:

"வடமொழி ஆதிகாவியம் எனப்படும் வான்மீகத்தில் அகத்தியர் சுட்டப்படுகிறார். அவரும் விந்த மலை சார்ந்து ஒருவரும் தென்னாட்டில் ஒருவரும் என இருவர் என்பர். அவலோகிதன் என்பானிடம் தமிழ்கேட்ட அகத்தியர் ஒருவரும் சுட்டப்படுவார்.

'ஆகஸ்தம்' என்னும் சொல்லுக்குத் தெற்கு, தென்னாடு, தென்மொழி என்னும் பொருள்களும் உண்டு என்றும், அப்பொருள் அகத்தியர் தொடர்பால் வந்தது என்றும் கூறுவர். ஆனால், அவ்வாறு அகத்தியரைச் சுட்டும் இடத்தும் அவர் தமிழ் வல்லார் என்றோ இலக்கணம் செய்தார் என்றோ குறிப்பு இல்லை என்றும் கூறுவர். (தமிழ் வரலாறு; முதற் றொகுதி. இரா. ராகவ ஐயங்கார் (பக். 190 -214).

'இவரை ‘அமர முனிவன்' என்பது முதலாகக் கூறுவன எல்லாம் வட நூலில் வேதம் இதிகாசம் புராணங்களில்