உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

149

நூற்றாண்டுக்கு மேற்பட்டுக் கிளர்ந்த புறப்பொருள் வெண்பா மாலை, நம்பியகப் பொருள் விளக்கம், தண்டியலங்காரம் முதலான நூல்களால் அறிய வருகின்றன.

"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்

தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்

தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த

பன்னிரு படலமும்"

என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரப் பகுதி

“பூமலி நாவன் மாமலைச் சென்னி

ஈண்டிய இமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகைதீர்த் தலைகடல் அடக்கி மலையத் திருந்த இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த புலவர்பன் னிருவருள் தலைவன் ஆகிய தொல்காப்பியன்”

என்பது நம்பியகப்பொருளின் பாயிரப் பகுதி

வடதிசை யிருந்து தென்மலைக் கேகி மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை

இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த

பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த

தொல்காப் பியநெறி

என்பது தண்டியலங்காரப் பிரதியில் உள்ளதெனப் பெருந் தொகை காட்டும் பாயிரப் பகுதி (1564).

யாப்பருங்கலக்காரிகை அவையடக்கப் பாடலும்,

"கானார் மலையத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் நூல்' எனக் குறிக்கிறது.

கம்பர் காலத்திலும், பரஞ்சோதியார் (திருவிளையாடற் புராணம்) காலத்திலும், தலபுராணங்களைப் பாடிக்குவித்தோர் காலத்திலும் அகத்தியப் புனைவுகள் பெருகிப் பெருகிப் அகத்தியரே தமிழின மூலவர் என்றும் அவர் செய்ததே