உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

அகத்தியப் பேரிலக்கணம் என்றும் முனிவர் என்றால் அவரே என்றும், அவர் இன்றும் இருப்பவர் என்றும் புனைந்துரைக்கப் பட்டார். அதனால் நாட்டியற் பாவலரான பாரதியாரும்,

'ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை

எனப் பாடினார்.

66

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

99

'ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய" எனவரும் பாவின் அடியே, அவ்வகத்தியர்க்கு முன்னரே தமிழ் நூல் உண்மையை உணர்த்தும் எனத் தெளிவிப்பார் தமிழ்க் கா.சு.(தமிழ் இலக்கிய வரலாறு பக்.41)

அகத்தியர் பெயரால் வழங்கப்படும் நூல்களாக 'இலக்கிய அகராதி' வழியே அறியப்படுவனவற்றின் எண்ணிக்கை 123.

அகத்தியர்-அம்மை சாத்திரம்' என்பது தொடங்கி, ‘அகத்தியர்-வைத்தியம் 150' என்பது ஈறாக அவை உள்ளன. அவை வைத்தியம், யோகம், நாடி, சாலம், ஞானம், தீட்சை, மந்திரம், சோதிடம், இரசம் முதலிய பிரிவுகளைச் சார்ந்தவை. 'புனை சுருட்டு - 18' என்று கூட அவர் பெயரால் ஒரு நூலுண்மை அறியப்படுகின்றது. அகத்தியர் தேவாரத்திரட்டு என்னும் தொகுப்பு நூல் பலரும் அறிந்ததே.

இவற்றை நோக்க எவரெவரோ தாம் தாம் விரும்பும் துறைகளில் நூல் செய்து, அகத்தியர் பெயரால் விட்டு விட்டனர் என்பதும், அப் பணியும் ஒரு கால எல்லையில் நிகழாமல் காலம் காலமாக நிகழ்ந்து வந்துள்ளது, நிகழ்ந்தும் வருகின்றது என்பதும் தெளிவாம்.

அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டுவரும் மருத்துவ நூல்களை "இப்பொழுது இவர் (அகத்தியர்) பெயரால் வழங்கும் நூல்கள் போலி நூல்களே" எனச் 'சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதி' மதிப்பீடு செய்து உரைக்கின்றது. அகத்திய வரலாறு பெருகிப் பெருகிப் பேருருக் காட்டுவது போலவே இலக்கண நூற்பாக்களும் வரவரப் பெருகுதலும் அறிய வேண்டும்.