உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

151

தொல்காப்பியர் செய்யுளியலில் 'ஆறடி அராகம்' எனவும், ‘தரவே எருத்தம்', எனவும், 'இருவயினொத்து' எனவும் வருவன வற்றை அகத்திய நூற்பாக்கள் என்கிறார் இளம்பூரணர். தெய்வச் சிலையாரும் ஓரிரு நூற்பாக்களைக் காட்டுகிறார் (சொல். வேற்.63).

நன்னூல் முதல் உரையாசிரியர் மயிலைநாதர் ஓரிரு நூற்பாக்களை எடுத்தாள்கிறார். ஆயினும் இவர்களுக்குப் பிற்பட்ட சங்கர நமச்சிவாயரோ பதின்மூன்று நூற்பாக்களை எடுத்தாள்கிறார். இவற்றால் பிற்பட்ட காலத்தே அகத்தியர் பெயரால் நூற்பாக்கள் உருவாக்கம் செய்யப்பட்டு உலவ விடப்பட்டன என்பது தெளிவாகின்றது.

நூற்பாக்களின் நிலையையே இவ்வாறாகப், பேரகத்தியம் என ஒரு நூல் பன்னீராயிரம் நூற்பாக்களால் அமைந் திருந்தது எனின் நம்புதற்கு இயல்வதோ? தமிழ் நூற்பரப் பெல்லாம் கண்ட பெரும்புலமை நச்சினார்க்கினியர்க்கும், தமிழ் நூற்பரப்பு இவ்வளவினதா என வியப்புறும் வண்ணம் உரைவிளக்கம் வரைந்த யாப்பருங்கல விருத்தியுடை யார்க்கும் தட்டுப்படாமல் பேரகத்தியம் என ஒன்று இருந்து 19ஆம் நூற்றாண்டு அளவில் ஒருவர் கைவயப்படக் கிடந்தது எனின் அறவே நம்புதற்கு இயலாச் செய்தியேயாம்.

என

உரையாசிரியர்களால் அகத்திய நூற்பாக்கள் மேற்கோள் காட்டப்பட்டவையும் தாம் எத்தகையவை அவற்றை மதிப்பிட்டு உரைக்கிறார் மயிலை சீனி. வேங்கட சாமியார்:

"அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கி வந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் அகத்தியச் சூத்திரங்கள் இடந் தருகின்றன" என்று 'கன்னித் தென்கரை' என்னும் நூற்பாவை எடுத்துக் காட்டி உரைக்கிறார்.

மேலும், மேற்கோள் காட்டுகிற அகத்தியச் சூத்திரத்தில் கொங்கணம் துளுவம் குடகம் என்னும் நாடுகள் தமிழ் திரிந்த நிலங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த நாடுகள் கடைச் சங்க காலத்தில் அதாவது கி.பி. 300க்கு முன்பு தமிழ் நாடுகளாகவும் தமிழ்மொழி வழங்கிய இடங்களாகவும் இருந்தன என்பதைச் சரித்திர ஆராய்ச்சி வல்லார் அறிவர். இந்த நிலங்களில் தமிழ் மொழி திரிந்து வேற்று மொழியானது பிற்காலத்தில் கி.பி. 300க்குப் பிற்பட்ட காலத்தில். எனவே இந் நிலங்களைத் தமிழ்