உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

165

என்னும் பேரகத்திய நூற்பா (44) சுருங்குதல் காண்க. இச் சுருக்கு மேல்விளைவு வெளிப்பாடாம்.

நன்னூல் நூற்பாவை முத்துவீரியனார் அப்படியே கொள்ளுமிடத்தும் பேரகத்திய நூலார் சிறுமாற்றம் செய்து தம்மதாக்கிக்கொண்டுள்ளமை அறியலாம்,

"அண்பல் அடிநா முடியுறத் தநவரும்”

என்பது நன்னூல் (25) இவ்வாறே முத்துவீரியத்தும் இந் நூற்பா டம் பெற்றது (50) பேரகத்தியத்தில் இது,

“அண்பல் அடிநா முடியுறத் தநவாம்”

என வடிவெடுக்கின்றது (169).

இவ்வாறே

CC

"அண்ணம் நுனிநா வருட ர, ழ வரும்"

என்னும் நன்னூலை (20 அப்படியே மேற் கொள்கிறது முத்துவீரியம் (53). பேரகத்தியமோ,

"அண்ணம் முடிநா வருட ரழ வரும்”

என்றாக்கி கொள்கிறது (72).

"ஆவி இடைமை இடமிட றாகும்

மேவும் மென்மை மூக் குரம் பெறும் வன்மை'

99

என்னும் நன்னூலை (20) அப்படியே தழுவிக்கொண்டிலர் முத்துவீரியர்.பேரகத்தியரோ,

"ஆவி இடைமை இடமிட றாகும்

மேவும் உரம் வலி மெல்லின மூக்காம்'

29

என ஒருபால் மாற்றித் தம்மதாக்கிக்கொண்டுளார் (62)

இதுகாறும் சொல்லப்பட்ட விளக்கங்களாலும் எடுத்துக் காட்டுகளாலும் பேரகத்தியம் எனப் பெயர் கொண்டு வெளிப் பட்ட நூல் அகத்தியர் பெயரால் எழுந்த போலி நூல் என்பது விளங்கும். இலக்கணம் வல்ல ஒருவர் முத்துவீரியத்தைப் பார்த்து அதனைப் போலச் செய்து, தம் பெயரால் வெளிப்படுத்தாராய் அகத்தியர் பெயரால் அவர் கேள்விப்பட்டிருந்த பேரகத்தியம் இதுவே என நிலை நாட்ட மேற்கொண்ட முயற்சியே ஈது என்பது வெளிப்படும் செய்தியாம்.