உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இப்படியும் இட்டுக் கட்டும் நூல்கள் உண்டோ எனத் தமிழாய்வுடையார் ஐயுறார். திருவள்ளுவர் பெயராலேயே ஞான வெட்டியான் என்றொரு நூல் உண்டாயிற்று.

இன்னிலை' என்றொரு நூல் பதினெண்கீழ்க் கணக் கினுள்ளே புகுந்து முக்காடு இட்டு முகம் காட்டவும் தொடங்கிற்று. அந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந் தேவனார் கடவுள் வணக்கம் பாடினாராம். மதுரையாசிரியர் தொகுத்தாராம். பொய்கையார் பாடிய நூலாம் அது பாடிய நூலாம் அது கப்பலோட்டிய தமிழரையும் மயக்கி வெளியிடச் செய்த நூல் அது. ஆயினும் கைந்நிலை என்னும் நூல் வெளிப்பட்ட பின்னர் அது போலி நூல் எனப்பட்டது. இல்லாக்கால் அந்நூலே கீழ்க்கணக்கில் ஒன்றென நின்றிருக்கும்! ஆனால் பிரபந்த தீபிகை என்னும் நூல் "ஈரொன்பான் கீழ்க்கணக்கென" ஒரு பாவில் "சிறுகைந்நிலை அறுபதாகும்" என உறுதிப்படுத்தியும் விட்டது.

இந்த 1986-ஆம் ஆண்டில்தான் என்ன? ஐந்திறம் என்னும் பொய்ந்நூல் பொறிவாணம் விடவில்லையா? மயனார் நூலெனக் கருமாரி வீரபத்திரனார் வெளியிட்டதாயிற்றே! ஆதலால் புகழ்வாய்ந்த பழையவர்கள் பெயரால் புதுநூல் இயற்றி அவர்கள் தலையிலே கட்டிவிட்டுப் பூரிப்பது இம்மண்ணில் புதுமை இல்லை என்பதே வெளிப்படுகின்றது.

இவ்வெல்லாரினும் அகத்தியர் தலையில் வாரி வாரிப் பலரும் கொட்டிய குப்பைகளே வண்டிக் கணக்கில் உள்ளவை என்பதில் தனக்கும் பங்கைப் பெற்றுக்கொண்டது பேரகத்தியம் ஆகும்.

"பேரகத்தியம் மெய்ந்நூல் அன்று! பொய்ந்நூல்! எவரோ ஒருவர் பிற்காலத்தில் என்ன, அச்செல்ல+ாம் உண்டாகிய 19 ஆம் நூற்றாண்டில் முத்துவீரியத்தைப் பக்கமாக வைத்துக்கொண்டு அதன்மேல் சேர்ப்பன சேர்த்து அரைத்துக் கூட்டிய கூட்டு என்று வெளிப்படுத்துவதால் ஆகும் பயன் என்ன? என் று சிலர் எண்ணலாம். ஆனால், தமிழ் வரலாற்றுச் சிக்கல்களை உணர்வார் அவ்வாறு எண்ணார்.

தொல்காப்பியத்தில் தமிழ் இலக்கணமும் தமிழர் வாழ்வுமே பேசப்படுகின்றன. ஆயினும் அதனை வேதநெறி வழக்கினதாகவும் வடநூல் வழக்கினதாகவும் வருணப் பகுப்புக்கு உரியதாகவும் ஆக்கிவைத்தவர்கள் பழைய உரைகாரர்கள் மட்டுமல்லர்; ஆய்வாளர்களும் மிகப்பலராயினர். தொல்காப்பியம் தமிழ்