உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ஆய்தம் மெய்போல் உயிர்பெற் றிலதாம் ககரமுதன் மூவாறுங் காட்டுமாய் தமுமெய்

ககரமுதன் மூவாறுங் காத்திர மாகும்

உடலுடம் பொற்றல் லூமைவியஞ் சனமெய்

ஊமையும் ஒற்றும் உடலெனப் படுமே

தனிநிலையு மெய்யும் தனித்தொலி யாவே

மெய்வலி மெலிவிடை விரியுமூ வினமாம்

வல்லெழுத் தாவன கசட தபற

அவற்றுள்

வல்லெழுத் தென்மனார் கசட தபற

வலிவன்மை வன்கணம் பரிசம்வல் லினப்பெயர் வன்மை வன்கணம் வலிவல்லெழுத் தாகும்

மெல்லெழுத் தாவன ஙஞண நமன்

மெல்லெழுத் தென்மனார் ஙஞண நமன

மெலிமென்மை மென்கணம் மெல்லினப் பெயரே மென்மைமென் கணமெலி மெல்லெழுத் தாகும்

இடையெழுத் தென்மனார் யரல வழள

இடையெழுத் தாவன யரல் வழள

இடையிடைமை யிடைக்கண மிடையினப் பெயரே

இடைமை இடைக்கண மிடையிடை எழுத்தே

உயிர்முதன் முப்பது மொன்றற் கொன்றினம்

உயிர்முதன் முப்பது மொன்றற் கொன்றினம்

இஉ இரண்டும் ஐஔக் கினமே

அவற்றுள்

இஉஐ ஔக் கினமென மொழிப

உயிர்மெய்

அளபெடை இரண்டாய்த மறுகுறுக்கஞ் சார்பாம்

சார்புயிர் மெய்தனி நிலையிரு பாலன

புல்லல் சார்தல் புணர்தல்சார் பின்பெயர்

புல்லல் சார்தல் புணர்தல் சார்பெனலே

13

14

15

16

17

18

19

20

21

22

22

23