உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

247

முற்பட்டவர் என்னின், அம்முற்பாட்டைக் காண வேறு ஏதேனும் சான்று வேண்டும். அச்சான்று கடல்கோள் சான்றாம். இலங்கை வரலாற்றின்படி மூன்று கடலூழிகள் அறிய வருகின்றன.

அவை:

1. கி.மு.2387 இல் இலங்கை தென்னிலத்தில் இருந்து பிரிவுபடுமாறு அமைந்த கடல்கோள்.

2.கி.மு.504 இல் பாண்டுவாசா என்பார் காலத்தில் ஏற்பட்ட கடல் கோள்.

3. கி.மு.306 தேவனாம் பிரியன் நாளில் ஏற்பட்ட கடல்கோள்.

இவற்றைச் சான்றாகத் தமிழ் நாட்டு வரலாறு கூறுகின்றது. தமிழ் நாட்டு அரசு வெளியீடு: 1975.

கி.மு.145-இல் ஒரு கடல்கோள் நிகழ்ந்ததாகச் சான்று காட்டுகிறார் இரா.இராகவர் இவற்றின் பின்னரும் தமிழகப் பரப்பில் ஏற்பட்ட கடல்கோளால் புகார் நகர் முதலிய பகுதிகள் அழிந்துள. கொற்கை, கீழ்கடல் தொண்டி முதலியவும் அழிந்துள். இக்கடல்கோள் சிலப்பதிகார காலத்தை அடுத்து கி.பி. இரண்டாம் நூறாண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.

தென்னகத்தில் இருந்து இலங்கை பிரிந்த காலத்துக் கடல்கோளின் பின்னரே வான்மீகர் வாழ்ந்து தென்னகம் பற்றி உரைத்ததால் 'கடல் சூழ் இலங்கை' என்கிறார். சீத்தலைச்சாத்தர், 'குரங்குசெய் குமரியம் கடற்றுறை' என்கிறார். ஆதலால், இலங்கை தீவமாகப் பிரிந்த பின்னிலை இவர்கள் காலமாம் நிற்க. கி.மு. நிற்க.கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருக தேவர் கேட்ட ஐந்திரத்தைத் தொல்காப்பியரும் கற்றார். ஆதலால், அக்கால எல்லை தொல்காப்பியர்க்கும் ஏற்பதேயாம். வழக்கு செய்யுள் கற்று அவர் ஐந்திரப் புலமையும் பெற ஐம்பது அகவையர் ஆகி இருக்கக் கூடும். பின்னர்த் தொல்காப்பியர்க்கும் ஏற்பதேயாம். வழக்கு செய்யுள் கற்று அவர் ஐந்திரப் புலமையும் பெற ஐம்பது அகவையர் ஆகி இருக்கக் கூடும். பின்னர்த் தொல்காப்பியம் இயற்றி அரங்கேற்றமும் நிகழ நெடிய காலம் தேவைப்பட்டிருக்கும். நூல் அரங்கேற்றத்தின் பின்னரும் வாழ்ந்து இரண்டாம் கடலூழிக்கு ஆட்பட்டனர்

எனலாம்.

கி.மு.504-இல் ஏற்பட்ட கடல்கோள் அது எனின் கி.மு.594 தொல்காப்பியர் தோன்றிய மேல் எல்லையாகவும். கி.மு.504