உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நாள்

தொல்காப்பியர் காலம்

249

அவ்வழியே வழியாய்த் தமிழ்நாட்டு அரசு, திருவள்ளுவர் ஆண்டினை ஏற்றது; அவர் நாளினைத் தைத்திங்கள் இரண்டாம் நாளாக உறுதி செய்தது. தை முதல் நாளைத் தமிழர் ஆண்டுப் பிறப்பாகச் சட்டம் செய்தது. இம்மரபு உலகொத்த மரபேயன்றி சுருக்க நோக்கினது அன்று.

தைச் சிறப்பு

தமிழர் வாழ்வின் எதிர்பார்ப்பிலும் ஏற்றத்திலும் இயற்கை இயங்கியல் வழியிலும் தைத்திங்கள் முதல் நாள், ஆண்டுத் தொடக்கம் என்பதற்கு மிகத்தகுவதாம். சித்திரையோ எரி நாள்; எரிமீன் வாட்டலும் கூடிய நாள். அதனினும் தைத் திங்கள் ஆண்டுப் பிறப்பாதல் சீரிதாம்.

"பங்குனி மாதம் பகல்வெளி நடந்த பாவத்தில் போவேனாகவும்" எனத் தற்சாவிப்புத் தரும் திங்களை அடுத்த எரி நாளில் தொடங்கும் புத்தாண்டிலும், நிலமகள் பூரித்துக் கலகல என நகைப்பது போல வளங்களை எல்லாம் வழங்கும் தைந் நாள் இயற்கை குலவிக்கொஞ்சுவதாம். அதனால் 'தைப் பிறந்தால் வழிபிறக்கும்' என்னும் வாழ்வியல் சுரப்பைத் தமிழுலகம் கண்டது; கொண்டு போற்றியது.

உழவன் ஏர்க்காலும் தார்க்கோலும் எடுத்து மாடு ஓட்டத் தொடங்கும்போது ஒலிக்கும் ஒலி தை, தை, தை, ஆடல் கலையின் அடியெடுத்து வைப்பே தை, தை, தை. துண்டான வற்றை ணைக்கும் இணைவு ஆணை தை. தொழில் தையல், தைத்தல் ஓரரிய கலை!

கன்னியர் கொள்ளும் கவின் நோன்பு தைந்நீராடல், பாவைப் பாட்டின் நிறைவு தைந்நீராட்டு!

அந்நீராட்டின் அருமையை அறிய

திருவெம்பாவை திருப்பாவையில் திளைக்க.

வேண்டுமா?

தைஇத்திங்கள் தண்கயம் என எத்தகு பாராட்டுப் பெறுகிறது. கயம் (ஆழ்நீர் நிலை) மற்றை நாளிலும் திங்களிலும் இல்லாததா அக்கயம்?

'தைஇத்திங்கள் தண்கயம்' என்கின்றன நற்றிணையும் (80); புறநானூறும் (70) ‘தை இத் தண்கயம்' என்கிறது ஐங்குறு நூறு (84) பாரியின் பறம்புத் தைஇத்திங்கள் தண்ணிய நீரைக் குறிக்கிறது குறுந்தொகை (196) அது.