உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய

என்கிறது.

59

தைந்நீர் ஆடுவார் ஒருவரா? இருவரா? ஊரூர் ஊரூர் வாழ்நர் அனைவரும் ஆடுவர்.

தைஇத்தண்கயம் போலப் பலர்படிந்து

என்கிறது ஐங்குறு நூறு (84)

தையில் நீராடும் பேறு தவப்பேறு. அப்பேறு வாய்த்தல் அரிது. ஆதலால் தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ? என்கிறது கலித்தொகை (59)

தைந் நீராட்டுப் பற்றிய பெரிய பாட்டு பரிபாட்டு ஒன்று (11) அது, 'இன்ன பண்பின் நின் தைந்நீராடல்' என்கிறது. அதற்கு உரைகாரர். இத் தைந்நீராடலை முற்பிறப்பில் செய்த தவத்தாலே இப்பிறப்பிற் பெற்றேம். அதனை யாவரும் நயக்கத்தக்க நின்னீர் நிறைக் கண்ணே மறுபிறப்பினும் பெறுவேமாக என்கிறது.

முன்னை வாய்த்த நீரினும் தைந்நீரின் தெளிவு பெரிது தண்ணிதும் தெளிதலும் ஒருங்கே கொண்டது. அதனால், நீ தந்தாய் தைந்நீர் நிறந்தெளிந்தாய் என்கிறது அதே பரிபாடல் (17) இளங்குழந்தையர், இளஞ்செல்வியர், கன்னியர் நீராடல் மகிழ்வில் வரைகடந்தால் பாதுகாப்பு அரணம் வேண்டுமே அவர் எவர்?

"தாய் அருகா நின்று தவத்தைந் நீராடுதல்"

என்கிறது மேலைப் பரிபாடல்.

பராந்தக பாண்டியன் மெய்க்கீர்த்தி 'தைப்பூசப் பிற்றை ஞான்று வந்திருந்தார் எல்லார்க்கும் தியாகமிட அறத்தால் விளங்கிய பாண்டியன்' என்கிறது. இயற்கை இயங்கியல் படி தைத்திங்கள் பிறப்புக்குத் தனிச்சிறப்பு உண்டு. அஃது என்ன வெனில் இமயத்துப் பனிப் பொழிவு முதல் குமரிப் பனி நடுக்கம் வரை வருத்துவதற்கு மூலம் என்ன? அது கதிரினி தென் செலவு! அது முற்றுப் பெற்றுத் தைம்முதல் நாள் தொட்டு வடதிசைச் செலவு மேற்கொள்கின்றது. 'வெம்மை வேண்டல்'

என

ன்பந்தரத் தொடங்குகின்ற பெருமையும் பெற்றிமையும் கொள்கின்றது. ஆதலால், குடியும் குடித்தனமும், தொழிலும் வளமும் ஓங்கிச் சிறக்க உதவும் தைத்திங்கள் முதல் நாள் தமிழர்