உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

காட்டிலும் மேட்டிலும் உழைத்து, வீட்டிலும் வீதியிலும் வளம் சேர்த்ததும், அரிசியையும் மணிகளையும் பருப்புகளையும் தந்துவிட்டுத் தட்டை நாள், பொட்டு பொடி, தவிடு காடி என உண்டும் பருகியும் உழவனுக்கு உணவும், நிலத்துக்கு உரமும் தந்த காளைக்கும் எருதுக்கும், ஆவுக்கும் கன்றுக்கும் ஓய்வு தந்து பொங்கல் வளம் தந்து ஊர்மகிழ எடுக்கும் தேர்த்திருவிழா

-

அவ்விழா நாள் - மாட்டுப் பொங்கல் நாள் -உழவு பாடிய தமிழ் உழவர் முதுபெருங்கிழவர் முப்பால் கண்ட பொய்யா மொழியார் நாளாக ஆக்கப்பட்டது பெருஞ்சால்பினதாம். தொல்காப்பியர் நாள்

அதே போல் தமிழ்ப் பொங்கல் படைத்த தொல்லோன் பழந்தமிழ் வளமெலாம் பாய வைக்க ஒப்பிலா நூல் செய்த ஒல்காப்புலமைத் தொல்காப்பியன் விழாவாகத் தைம் முதல் நாளாம் பொங்கல் விழா நாளைத் தொல்காப்பியன் விழா நாளாகவும் உறுதிப்படுத்தி வழிவழி வழக்காக்கல் கடனாம். அது தமிழ் மொழியாம் கதிரோன் வழிபாட்டு நாளாகச் சிறக்க வழி செய்வதாம்.

"ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் தன்னேர் தனியாழிச் செங்கதிரொன் றேனையது தன்னேர் இலாத தமிழ்"

என்பது தமிழ் மொழிக் கதிர் வாழ்த்தாம்.

தமிழ் இயற்கையில் பிறந்து இயற்கை ஒலியால் சொல்லாகி இயற்கை வடிவாய் இயங்கித் தொன்று நாள் தொட்டு இன்று வரை இயங்கிவரும் செவ்வியல் செம்மொழி. செந்தமிழ் என்னும் பெயரீடு தற்கிழமையாய்க் கொண்டது.

சான்றோர் நாள்

செம்மைவேறு தமிழ் வேறு எனப் பிரிக்கக் கூடாமல் அமைந்தது. செஞ்ஞாயிறு செந்தாமரை போல அச்செவ்வியல் பேறு தொல்காப்பியர் திருவள்ளுவர் என்னும் இருவர் அளவில் அமைந்தது இல்லை. சங்கச் சான்றோர் பிற்காலச் சான்றோர் என எத்தனைபேர்? இச்சான்றோர் நாளாகத் தைத்திங்கள் மூன்றாம் நாளை அமைத்தல் சிறப்பாம்.