உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

சுறவமாம் தை முதல் நாள் தொல்காப்பியர் நாள்

இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள்

மூன்றாம் நாள் சான்றோர் நாள்

253

என நிரலே முறைப்படுத்துதல் நேரிய சீரிய முழுமைத் தமிழ் நெறியாம்.

வாழ்த்து

இனித் தைத்திங்கள் முதல் முன்று நாளுக்கும் வாழ்த்து வேண்டுமோ? வேண்டும் எனின், ஐங்குறுநூறு முதல் பத்து நோக்குக.

“வாழி ஆதன் வாழி அவினி”

எனவேட் டோளே யாயே

என்னும் அப்பத்தின் வாழ்த்துகளுள் சில வருவன :

நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க! - 1 விளைக வயலே! வருக இரவலர் - 2 பால்பல ஊறுக! பகடுபல சிறக்க - 3 பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக - 5 அறம் நனி சிறக்க! அல்லது கெடுக - 7 அரசு முறை செய்க! களவு இல்லாகுக - 8 நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக - 9 மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க - 10

என்றும் வேண்டத்தக்க வாழ்த்துகள் இல்லையா இவை?

இன்னும் கிடைத்தற்கு அரிய ஒரு வாழ்த்து; தகடூர் யாத்திரை தருவது நாட்டை வாழ்த்தும் அவ்வாழ்த்து, ஏட்டுக்கும் எழுத்துக்கும் மட்டும் எழிலாய் அமைந்தது இல்லை! நாடே ஒருமித்து நின்று இயற்கையைக் காத்து எஞ்சா வளங்களையெல்லாம் இயல்பாகப் பெற்று எல்லா உயிரும் இனிது வாழ வாழ்த்தும் வாழ்த்துப் பெட்டகமாம்!

அகன்று விரிந்த நாடு பெருகிவரும் நீரால் சிறப்பதாக! நிலத்தில் விதைக்கப்பட்ட விதை குறையாமல் முளைப்பதாக! முளைத்த வித்து முட்டுப்பாடு இல்லாமல் வளர மழை பொழி வதாக! பொழிந்த பின்னர்ப் பயிர் பக்கம் விரிந்து கிளைப்பதாக! அக்கிளைகள் எல்லாம் பால்பிடித்துத் தலைசாய்த்துக் கதிர்கள்