உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

மணிகள் கொள்வதாக! அக்களத்தில் நெற்குவியல்கள் காவல்

இன்றிக் கிடப்பதாக! களப்பணிகளால் உழவர் மகிழ்வொலி என்றும் நிறைவதாக!

இவ்வாழ்த்தைக் கூறும் பாடல்,

பெருநீரால் வாரி சிறக்க; இருநிலத்து இட்டவித்து எஞ்சாமை நாறுக; நாறார முட்டாது வந்து மழைபெய்க; பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க; அக்கிளை பால்வார்பு இறைஞ்சிக் கதிர் ஈன; அக்கதிர் ஏர்கெழு செல்வர் களம்நிறைக; அக்களத்துப் போர்எலாம் காவாது வைகுக; போரின் உருகெழும் ஓதை வெரீஇப் பெடையொடு

நாரை இரியும் விளைவயல்

யாணர்த் தாகஅவன் அகன்தலை நாடே!

என்பது.

(9)

மாடிக்குஏற ஏணி; மலைக்கு ஏறப் படிக்கட்டு; வாழ்வில் ஏற நூல் ஏணி! நாடு வாழ இயற்கைக் கொடைவளமாம் இவ் வாழ்த்து ஏணி! இவ்ஏணியைத் தந்தவன் எவனோ, தன் பாடலைப் புகழேணியில் வைத்துவிட்டுத்தான் அதனோடு அவனாய் அமைந்து விட்டான்.

முடிபு

இவ்வாய்வின் சுருக்கமும் முடிபும் வருமாறு. ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தை அறுதியிட அதன் பழமை பெருந் துணை. வாய்த்த தமிழ்ப் பரப்பில் உள்ள எவற்றுக்கும் பிற்பட்ட தாகாப் பெருமையது என்பதைத் தானே நிலைப்படுத்திக் கொள்ளும் தகவினைக் கொண்டுளது. அதில் வாய்க்கும் அகச்சான்றுகளுள் தலைப்பட்டது பனம்பாரனார் இயற்றிய பாயிரம். அதில் உள்ள நாட்டு எல்லைக்குறிப்பும் ஐந்திரக் குறிப்பும் அருமை வாய்ந்தவை.

மற்றைப்புறச் சான்றுகளுள் கயவாகு காலம், கடல்கோள் காலங்கள், யவனர் பற்றிய குறிப்புகள், அருகர் புத்தர் காலங்கள் என்பன சுட்டத்தக்கன.