உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

255

இவற்றைக் கொண்டு, இக்கணிப்புக்கும் கீழெல்லை இருக்க முடியாது என்னும் வகையில், தொல்காப்பியர் காலம் கி.மு.590 தொடங்கி கி.மு.504 முடியக் கொள்ளலாம் என்று செய்யப்பட்ட முடிவாகும். இயல்பாகப் புலவர் அவையம் திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்று முடிபு செய்ததைத் தமிழ்நாட்டு அரசு ஏற்று அந்நாளை ஆவணப்படுத்தியது. தைத்திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாகவும் அரசு ஏற்றுப் போற்றியது. அவ்வகையில் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டுப் பிறப்பு நாளாகவும் சட்டம் நிறைவேற்றியது. அப்புத்தாண்டு நாளை தைத்திங்கள் முதல் நாளைத் தமிழினப் பொங்கல் கொடையாக வழங்கிய தொல்காப்பியர் நாளாக அரசு ஏற்றுப் போற்றுதல் வேண்டும்.

-

-

தமிழ், செம்மொழி என்னும் சீர்த்தி பெற இயல்பாக வாய்த்த கொடையாளர் சங்கச் சான்றோர் நாளைத் தைத்திங்கள் மூன்றாம் நாளாக்கி மூன்று நாள்களையும் தமிழ்வள நாள்கள் ஆக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் சுருக்கமும் முடிபும் ஆம்!

இன்பமே சூழ்க! நலமே மல்குக!

வாழிய நலனே! வாழிய நிலனே!