உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நெறி காத்த தமிழ்க் காவலர்

தொல்காப்பியர்

தொல்காப்பியர் சமண சமயத்தவர் என்னும் பதிவு சிலர் நூல்களில் உள்ளது. திருவள்ளுவரையும் சமணர் எனக் கொள்வார் உளர். இவ்விருவருள் முதலாமவர் சமண சமயத்தவர் தாமா என்பதைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையாம்.

சமயம், மதம்

சமயம் என்னும் சொல்லோ மதம் என்னும் சொல்லோ தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. சங்கப்பாட்டு, தொகை, திருக்குறள் என்பவற்றிலும் இடம் பெறவில்லை. இச்சொற்கள் டம் பெற்றது மணிமேகலை நூல் தொட்டே ஆகும்.

சமணர்

தொல்காப்பிய ஆசிரியர் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதை யாவரும் அறிவர் என்று உறுதிப்படுத்துகிறார். வர்த்தமானன் பதிப்பக நிறுவனர் பேரா. சீர்சந்திரனார் (சைன தத்துவமும் பஞ்ச பரமேட்டிகளும் பக்.4) இக்கருத்துடைய ஆய்வாளர் சிலர்! தொல்காப்பியர் நாளில் வர்த்தமான மகாவீரர் பிறந்தார் அல்லர். ஆயினும் அச்சமயப் பெருமக்கள் இருபத் தொருவர் கூறப்படுகின்றனர். அக்காலத்தே சமணம் தமிழகத்தில் புகவில்லை! வர்த்தமானருக்குப் பின்னரேசமணம் பரப்பப்பட்டது.

சமணர்கள் - அமணர்கள் தமிழகத்தில் மதுரைப் பகுதியில் மிகப் பலர் மலைவாணராக வாழ்ந்துளர். சமணர் மலை, நாகமலை, ஆனைமலை என்பவை அவர்கள் வாழ்விடமாக இருந்துள. மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் தோன்றியது. அதன் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு. அதனை நிறுவியவர் வச்சிரநந்தி

என்பார்.

சமணர் தொண்டு

ஞானசம்பந்தர், நாவுக்கரசர் வரலாற்றை நோக்கின் சமணர் தமிழ்ச் சமயத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டமை புலப்படும். வேதியமோ வன்மையாகச் சமணத்தை முட்டியது. வேதியத்தைத் தழுவிய சைவமும் சமணத்தை எதிர்த்தது. சமணச் சான்றோர்