உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

விலக்கன்று! தமிழர் சமயமாகிய சிவநெறியும் மால்நெறியும் வடசொல் மாலையை ஏற்று மயங்கிக் கிடந்தமையும் இன்னும் மீளா அடிமை நிலையில் கிடப்பதும் அறிந்தால் சமய வாணர் நிலை புலப்படும்.

வினைக் கொள்கை

வினைக் கொள்கை அருக சமயத்தாரின் முத்திரை போல்வது. ஊழ் எனப்படும் உலகத்து இயற்கையையே 'ஊழ்வினை' எனத் தடமாற்றியது அருக சமயமேயாகும். ஊழ்வினை என்னும் சொல் தொல்காப்பியம், திருக்குறள், பாட்டு, தொகை ஆகிய இருபது நூல்களிலும் ஓரிடத்துத்தானும் இடம் பெறவில்லை. முதற்கண் ஊழ்வினை இடம் பெற்றது சிலப்பதிகாரத்தில் தான். அஃது அடிகளார் மேற்கொண்ட அருக சமயச் சார்பு வழிப்பட்டது. அறிவுக் கொள்கை

இனிச் சமண சமய அடிப்படைக் கோட்பாட்டில் ஓரறிவு முதல் ஐயறிவு வரை வரம்புபடுத்தப்பட்டதை அன்றி, ஐந்தன் மேல் ஏறிய மன அறிவாம் ஆறாம் அறிவுக்கு இடமில்லை.

"ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந் தாகும்"

என்றும் (நன்.444)

66

வானவர் மக்கள் நரகர் விலங்குபுள்

ஆதிசெவி அறிவோடு ஐயறி வுயிரே'

என்றும் (நன். 449) சமணப் பவணந்தியார் இயற்றிய நூல் கூறுகிறது.

தொல்காப்பியரோ,

“மக்கள் தாமே ஆறறி வுயிரே”

என்கிறார்.

தொல்காப்பியர் - கடவுட் கொள்கை

இனித் தொல்காப்பியர், நானிலங்களுக்கும் மாயோன், சேயோன், வேந்தன், வண்ணன் என்னும் தெய்வங்களையும், "தெய்வம் உணாவே மாமரம்புள்" என்னும் கருப்பொருளையும் வைக்கிறார்.

'கடவுள் வாழ்த்து' என்பது குறித்துத் தொல்காப்பியர்